News October 29, 2025
ஸ்டீபன் ஹாக்கிங் பொன்மொழிகள்

*மாற்றத்திற்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் திறனே புத்திக்கூர்மை.
*நாம் வேடிக்கையானவர்களாக இல்லாவிட்டால் வாழ்க்கை நரகமாகிவிடும்.
*நீங்கள் எப்போதும் கோபமாக புகார் கூறிக் கொண்டே இருந்தால், உங்களை மக்கள் புறக்கணிப்பார்கள்.
*‘அறியாமை’ என்பது அறிவாற்றலின் மிகப்பெரிய எதிரியல்ல, அது அறிவின் மாயையே ஆகும்.
*யார் விதியும் இங்கு எழுதப்படவில்லை.
Similar News
News October 30, 2025
பணி நியமன விவகாரம்.. சிபிஐ விசாரணை கோரும் அன்புமணி

நகராட்சி நிர்வாகத்துறை பணி நியமன முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை என அன்புமணி தெரிவித்துள்ளார். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதிலும் கரப்ஷன், கமிஷன் கலாச்சாரத்தை திமுக அரசு கட்டவிழ்த்து விட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று அவர் கூறியுள்ளார். அமலாக்கத்துறை ஆதாரங்களின் அடிப்படையில், தமிழக போலீஸ் உடனடியாக வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
News October 30, 2025
டெக்னாலஜி ஸ்டார்ட்அப்களுக்கு ₹10,000 கோடி: பியூஷ் கோயல்

FFS திட்டத்தின் மொத்த நிதியையும் (₹10,000 கோடி), அடுத்த ஆண்டில் டெக்னாலஜி சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஒதுக்க உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இது, ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வெளிநாட்டு சார்பு நிலையை குறைத்து, உள்நாட்டு தொழில்நுட்ப தயாரிப்புகளை அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்தியாவை கண்டுபிடிப்புகளின் மையமாக மாற்ற பயன்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
News October 30, 2025
தமிழ்நாட்டுக்கு SIR அவசியம்: ஜெயக்குமார்

வாக்காளர் பட்டியலில் உண்மைத்தன்மை வேண்டுமென்றால் TN-க்கு SIR அவசியம் என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக ஆய்வின்படி, 2023-ல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தொகுதியிலேயே இல்லாத 40,000 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்ததாக அவர் கூறியுள்ளார். மேலும் பூத் லெவல் ஆபிசர், கட்சிகளின் ஏஜெண்ட் இணைந்து செயல்பட்டால் வெளிப்படைத்தன்மையுடன் வாக்காளர் பட்டியல் வெளியாகும் என்றும் அவர் பேசியுள்ளார்.


