News October 29, 2025
BREAKING: கரையை கடந்தது மொன்தா புயல்

வங்கக்கடலில் உருவான மொன்தா புயல் ஆந்திராவின் மசூலிப்பட்டிணம் – கலிங்கப்பட்டிணம் இடையே நள்ளிரவு 12:30 மணியளவில் கரையை கடந்ததாக IMD தெரிவித்துள்ளது. இந்த புயல் அடுத்த 1-2 மணி நேரத்தில் முழுமையாக கரையைக் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 6 மணி நேரத்தில் வலுவிழக்கும். இதனிடையே, ஆந்திராவின் கடலோர பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
Similar News
News October 29, 2025
இந்தியாவின் கைப்பாவையாக ஆப்கன் உள்ளது: பாகிஸ்தான்

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் , இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் தொடர்கிறது. இதனிடையே ஆப்கானிஸ்தான், இந்தியாவின் கைப்பாவையாக செயல்படுவதாக பாகிஸ்தானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவின் துண்டுதலின் பேரில், ஆப்கானிஸ்தான் செயல்படுவதாகவும், பாகிஸ்தானின் பதில் தாக்குதலை ஆப்கானால் தாங்க முடியாது எனவும் எச்சரித்துள்ளார்.
News October 29, 2025
படிக்க காசு இல்லையா? இதோ அரசு திட்டம்!

உயர்கல்வி படிக்க நிதி இல்லாத மாணவர்களுக்கு ₹10 லட்சம் வரை பிணையம் இல்லாமல் கடன் வழங்குகிறது மத்திய அரசின் PM வித்யாலட்சுமி கல்வி கடன் திட்டம். மெரிட்டின் அடிப்படையில் சீட் பெறும் மாணவர்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். வாங்கிய கடனை செலுத்தமுடியாமல் போனால், வட்டியில் 3% மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <
News October 29, 2025
அதிமுகவில் களமிறங்கும் நடிகை கவுதமி!

2026 சட்டப்பேரவை தேர்தலில் சென்னையில் உள்ள ஒரு தொகுதியில் களமிறங்க நடிகை கவுதமி காய் நகர்த்தி வருகிறார். பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த அவர், தற்போது கொள்கை பரப்பு துணை செயலாளராக உள்ளார். வரும் தேர்தலில் மயிலாப்பூர், வேளச்சேரி, ஆயிரம் விளக்கு இவற்றில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட உள்ளதாக கூறப்பட்டது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் வேட்பாளரை போல் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.


