News October 29, 2025
Sports Roundup: ஷ்ரேயஸ் ஐயர் உடல்நிலையில் முன்னேற்றம்

*ஷ்ரேயஸ் ஐயர் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பிசிசிஐ தகவல். *புரோ கபடி லீக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் 46-39 என்ற புள்ளிகள் கணக்கில் பாட்னா பைரேட்ஸை வீழ்த்தி குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேற்றம். *ஆசிய யூத் கேம்ஸ் குத்துச்சண்டை 66 கிலோ பிரிவில், ஆனந்த் தேஷ்முக் வெண்கலம் வென்றார். *அதே போல TT கலப்பு இரட்டையரில் சிண்ட்ரெல்லா தாஸ், சர்தக் ஆர்யா இணைக்கு வெண்கலம் கிடைத்தது.
Similar News
News October 29, 2025
மக்கள் நாயகன் காலமானார்.. அமைச்சர் இரங்கல்!

தென் மாவட்டங்களில் ‘மக்கள் நாயகன்’ என அழைக்கப்பட்ட <<18127223>>Dr.ராஜசேகர்<<>> மறைவுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு இரங்கல் தெரிவித்துள்ளார். ஏழை மக்கள் நலனுக்காக அவர் மேற்கொண்ட சேவைகள் நம் அனைவரது மனதிலும் என்றென்றும் நிலைத்து நிற்கும் எனவும் புகழாரம் சூட்டினார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக ₹20 – ₹50 வரை மட்டுமே பீஸ் வாங்கி கொண்டு ஏழைகளுக்கு சிகிச்சை அளித்த Dr.ராஜசேகர் மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
News October 29, 2025
IND vs AUS: மழை குறுக்கிடுமா?

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான T20 போட்டி இன்று தொடங்குகிறது. ODI தொடரை 2- 1 என இழந்த இந்தியா, ஆஸ்திரேலியாவை பழிதீர்க்குமா என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ள நிலையில், மழை அச்சுறுத்தல் உள்ளது. ஆஸ்திரேலிய தலைநகர் கான்பெராவில் நடைபெறும் போட்டியில், 25% வரை மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
News October 29, 2025
அதிமுகவில் இணைந்தனர்.. செந்தில் பாலாஜி அதிர்ச்சி

கரூரில் EX அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, MR விஜயபாஸ்கர் இருவரும் மாறி மாறி மாற்றுக்கட்சியினரை தங்கள் வசம் இழுத்து வருகின்றனர். கடந்த 9-ம் தேதி கரூரை சேர்ந்த ADMK நிர்வாகிகள் சிலர் திமுகவில் இணைந்ததாக செந்தில் பாலாஜி தனது SM-ல் பதிவிட்டிருந்தார். உதவி செய்வதாக அழைத்து சென்று திமுக துண்டு போட்டு போட்டோ எடுத்ததாகவும், அவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைந்ததாகவும் ADMK தரப்பு புதிய போட்டோ வெளியிட்டுள்ளது.


