News October 29, 2025

திருவாரூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று இரவு முதல், காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்தில் உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

Similar News

News October 29, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட 85577 மனுக்கள்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “திருவாரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 16-ம் தேதி முதல் உங்களுடன் ஸ்டாலின், பொதுமக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. நகர் பகுதியில் 54 மற்றும் ஊரகப் பகுதியில் 131 முகாம்கள் என நடைபெற்றதில் 85577 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது இதில் 66975 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 29, 2025

மன்னார்குடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

image

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியம், துளசேந்திரபுரம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், நெல் கொள்முதல் பணிகள் மற்றும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளின் பாதுகாப்பு முறைகள் குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

News October 29, 2025

திருவாரூர்: மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

image

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண்கரட் தலைமையில், நேற்று மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து உட்கோட்ட மற்றும் சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்கள் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் இதில், சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

error: Content is protected !!