News October 29, 2025

பெரம்பலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று (அக்.28) இரவு 10 மணி முதல் இன்று (அக்.29) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

Similar News

News October 29, 2025

அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆட்சியர் ஆலோசனை

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சுருக்கத்திருத்தம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில் இன்று (29.10.2025) நடைபெற்றது. இதில், அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

News October 29, 2025

பெரம்பலூர்: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் வேண்டுமா?

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க<> https://tnuwwb.tn.gov.in<<>>/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும் அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 29, 2025

பெரம்பலூர்: விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருகின்ற 31-10-2025 அன்று விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!