News October 29, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(அக்.28) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News October 29, 2025
விழுப்புரம் காவல்துறை அதிரடி சோதனை!

விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் கடந்த 10 நாட்களாக போதைப் பொருளுக்கு எதிராக பல்வேறு அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த சோதனையில் கடந்த 10 நாட்களில் 1841 புதுச்சேரி மது பாட்டில்கள், 285 கிலோ குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் மற்றும் 400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் இன்று(அக்29) தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 29, 2025
விழுப்புரம்: பெண்களுக்கு ஆபீஸில் பிரச்னையா? உடனே CALL!

விழுப்புரம் மாவட்ட பெண்களே.., உங்களுக்கு அலுவலகத்திலோ, பொது இடங்களிலோ, பாலியல் சீண்டல், அணுகுதல், வன்முறை, பின் தொடர்தல் போன்ற எவ்வித பிரச்னைகளை சந்தித்தாலும் உடனே 181 எனும் கட்டணமில்லா எண்ணை அழைக்கவும். உங்களுக்கான உடனடி உதவி கிடைக்கும். மேலும், பெண்கள் பாதுகாப்பு குறித்த திட்டங்களை தெரிந்துகொள்ளவும் இந்த எண்ணை அழைக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 29, 2025
விழுப்புரம்: வாக்காளர் பட்டியல் திருத்தக் கூட்டம்

விழுப்புரம்: சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்று வருகின்றன அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் திராவிட முன்னேற்றக் கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சார்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.


