News October 29, 2025

அம்பேத்கார் விருது பெற தேனி ஆட்சியர் அழைப்பு

image

தமிழ்நாடு அரசின் சார்பில், வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள். சான்றோர் ஆகியோரில் சிறந்தோர்க்கு, திருவள்ளுவர் திருநாளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதில், பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவருக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கார் தமிழ்நாடு அரசு விருது வழக்கப்படுகிறது. தகுதி வாய்ந்த நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 29, 2025

தேனி விவசாயிகளே நவ.15 தான் கடைசி.!

image

தேனி மாவட்டத்தில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் விவசாயிகள் வரும் நவ.15ம் தேதிக்குள் நெற்பயிரை காப்பீடு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் குத்தகைதாரர்கள் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் இ சேவை மையங்கள், அரசுடைய ஆக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாக காப்பீடு செய்து கொள்ளலாம்.

News October 29, 2025

திருக்கல்யாணத்தில் வைக்கப்பட்ட ஒரு தேங்காய் 2 லட்சத்திற்கு ஏலம்

image

போடி சுப்பிரமணியர் சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று (அக்.28) திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் அபிஷேகத்திற்கு வரும் ஒரு தேங்காய் ஏலம் விடுவது வழக்கம். இந்த ஆண்டு நடந்த விழாவில் திருமாங்கல்யம் வைக்கப்பட்டு அபிஷேகத்திற்கு வந்த ஒரு தேங்காய் ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் தேங்காயை ராஜன் என்பவர் ரூ 2 லட்சத்திற்கு ஏலம் எடுத்தார்.

News October 29, 2025

தேனி மாவட்டத்தில் நவ.1.ல் கிராம சபை கூட்டம்

image

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நவ.1 அன்று காலை 11:00 மணிக்கு கிராம சபை கூட்டம் ஊராட்சி தனி அலுவலர் மற்றும் பி.டி.ஓ.,க்கள் மூலம் நடத்தப்பட உள்ளது. தங்கள் ஊராட்சிகளில் நடக்கும் இந்த கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று தங்கள் பகுதிகளில் உள்ள குறைகள் குறித்து தெரிவித்து அதற்கான பயனடையுமாறு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!