News October 29, 2025

சிவகங்கை: விவசாயிகள் குறைதீர் கூட்ட தேதி அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகின்ற 31.10.25 (வெள்ளிக்கிழமை) அன்று முற்பகல் 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. மாவட்டத்தின் அனைத்து துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவித்து அதனை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

Similar News

News October 29, 2025

சிவகங்கையில் நாளை இங்கெல்லாம் மின்தடை.!

image

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி துணை மின் நிலையத்தின் 11KV கண்ணமங்கலபட்டி பீடரில் (அக்-30) நாளை காலை 10மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணி நடைபெறுவதால் கண்ணமங்கலபட்டி, குமரிப்பட்டி, சாத்திணிப்பட்டி, பருகுபட்டி, காப்பாரப்பட்டி, நாட்டார்மங்கலம், அரசன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் ஜான் எஃப் கென்னடி தெரிவித்துள்ளார்.

News October 29, 2025

சிவகங்கை: ரயில்வேயில் கொட்டிக் கிடக்கும் வேலை !

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Clerk பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 3058
3. கல்வித் தகுதி: 12th Pass
4. சம்பளம்: ரூ.19,900-ரூ.21,700
5. வயது வரம்பு: 20 – 30 (SC/ST – 35, OBC – 33)
6. கடைசி தேதி: 27.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க.

News October 29, 2025

சிவகங்கை: உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கா?

image

சிவகங்கையில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களில், இந்த மாதம் 31ஆம் தேதி வரை 6 மாதம் முதல், 6 வயது வரையான குழந்தைகளுக்கு, ‘வைட்டமின் ஏ’ திரவம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. குழந்தைகளுக்கு கண் குருடு, குடல், சிறுநீர், சுவாசப் பாதைகள் மற்றும் தோல் போன்ற உறுப்புகளை தொற்றிலிருந்து பாதுகாக்க ‘வைட்டமின் ஏ’ உதவுகிறது. மறவாமல் குழந்தை வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!