News October 28, 2025
கேஸ் சிலிண்டர் புக் செய்வது இனி ரொம்ப ஈஸி

LPG சிலிண்டர்களை இனி ஈசியாக வாட்ஸ்அப்பிலும் புக் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள், தங்கள் பதிவு செய்யப்பட்ட எண்ணில் இருந்து ‘HI’ அல்லது ‘Refill’ என்று மெசேஜ் செய்தாலே போதும். புக் செய்வது, டெலிவரி டிராக் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் 24 மணி நேரமும் வாட்ஸ்அப்பில் பெறலாம். பாரத் – 1800 22 4344, Indane – 75888 88824, HP- 92222 01122 என்ற எண்களில் வாட்ஸ்அப் செய்யலாம். SHARE IT.
Similar News
News October 29, 2025
BREAKING: அமைச்சர் நேரு கைதாகிறாரா?

நகராட்சி நிர்வாகத்துறையில் 2,538 பணியிடங்களுக்கு பணம் பெற்றுக்கொண்டு வேலை வழங்கப்பட்டுள்ளதாக ED கூறியுள்ளது. அமைச்சர் நேரு, அவரது சகோதரர் வீடுகளில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில், நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு ED கடிதம் எழுதியுள்ளது. போக்குவரத்து துறையில் வேலைக்காக லஞ்சம் பெற்றதாக எழுந்த புகார் தொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜி சிறை சென்றார். அதே பாணியில் நேரு கைதாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News October 29, 2025
‘DUDE’ படம் அருவருப்பா இருக்குது: மோகன் ஜி

இன்னொருத்தருக்கு பிறந்த குழந்தைக்கு, ஹீரோ தன்னோட இனிஷியல் போட்டுக்க, அவங்க வீட்ல பர்மிஷன் கொடுக்கிறத பார்க்கும்போது அருவருப்பா இருக்கு என ‘Dude’ படம் குறித்து மோகன் ஜி தெரிவித்துள்ளார். இப்படம் அடுத்த தலைமுறைக்கு தவறான உதாரணம் என குறிப்பிட்ட அவர், மிகவும் முற்போக்காக செல்கிறோம் என்ற நினைப்பில் இப்படி ஒரு படத்தை எடுத்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் கூறியுள்ளார். உங்க கருத்து என்ன?
News October 29, 2025
ஸ்டாலினுக்கும் விஜய்க்கும் இதுதான் வித்தியாசம் : அப்பாவு

ஒரு பிரச்னை என்றதும், சம்பவ இடத்துக்கு இரவோடு இரவாக செல்லும் பழக்கம் கொண்டவர் CM ஸ்டாலின் என அப்பாவு தெரிவித்துள்ளார். ஆனால் விஜய்யோ இந்த நேரம் தூங்கி இந்த நேரம் எழ வேண்டும், இவ்வளவு தூரம்தான் பயணிக்கணும் என ஷெட்யூல் வைத்து அரசியல் செய்பவர் என பேசியுள்ளார். கரூர் துயரில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை விஜய் சென்னைக்கு வரவழைத்து ஆறுதல் கூறியது அரசியலில் ஒரு கரும்புள்ளி எனவும் கடுமையாக சாடினார்.


