News October 28, 2025
முதல்வரின் நெல்லை பயணம்; விரிவான அலசல்

முதல்வர் முக ஸ்டாலின் இன்றிரவு கோவில்பட்டியில் கருணாநிதி சிலையை திறக்கிறார். 10.30 மணிக்கு நெல்லை வருகிறார். அரியநாயகிபுரத்தில் தங்கி விட்டு நாளை காலை 11க்கு தென்காசி சீவநல்லூர் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். 11.30க்கு ஆனந்தபுரம் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு 12.45க்கு அமர் சேவா சங்கம் செல்கிறார். பகல் 1:30க்கு தென்காசி கெஸ்ட் ஹவுஸ் வரும் முதல்வர் மீண்டும் மாலை மதுரை செல்கிறார்.
Similar News
News October 29, 2025
நெல்லையில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை பிற்பகல் 4 மணிக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கு நடைபெறுகிறது. மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா தலைமை தங்குகிறார். இந்த கூட்டத்தில் அனைத்து எரிவாயு நபர் அவர்கள் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்து பயனடையலாம். *ஷேர் பண்ணுங்க
News October 29, 2025
நெல்லை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் வேலை

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உள்ள மத்திய கருவிகளுக்கான சர் சி வி ராமன் மையத்தில் 2 தொழில்நுட்ப உதவியாளர்கள், 2 திட்ட உதவியாளர்கள் தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். கல்வித்தகுதி மற்றும் விபரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தகுதி உடையவர்கள் சுயக்குறிப்புடன் அக்.29ம் தேதி காலை 10 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நேர்காணலில் பங்கேற்கலாம். SHARE
News October 29, 2025
புயல் காரணமாக நெல்லை ரயில் ரத்து!

மோன்தா புயல் காரணமாக இணை ரயில் ரத்து செய்யப்பட்டதால் நெல்லை வழியாக இயக்கப்படும் பெங்களூர் சிட்டி நாகர்கோவில் விரைவு ரயில் நாளை ரத்து செய்யப்படுகிறது. இதுபோல் நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக பெங்களூருக்கு செல்லும் 30ஆம் தேதி விரைவு ரயில் ரத்து செய்யப்படுகிறது என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. எனவே இந்நாளில் ரயிலில் பயணம் செய்ய முன் பதிவு செய்தவர்கள் மாற்று ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.*ஷேர்


