News October 28, 2025

உங்கள் குழந்தையிடம் ’SORRY’ சொல்லும் பழக்கம் இல்லையா?

image

குழந்தைகள் அடம்பிடிக்கும்போது நீங்கள் அவர்களை அடித்திருப்பீர்கள். இது தவறு என தெரிந்தும் மன்னிப்பு கேட்காமல் அப்படியே கடந்தும் சென்றிருப்பீர்கள். இதை கவனிக்கும் உங்கள் குழந்தையும், தவறு செய்தால் மன்னிப்பு கேட்க மறுக்கின்றனர். எனவே, உங்கள் குழந்தையிடம் நீங்கள் முதலில் மன்னிப்பு கேட்டு பழகுங்கள். இதன்மூலம் மரியாதையையும், மன்னிப்பு கேட்கும் குணத்தையும் அவர்கள் எளிதில் கற்றுக்கொள்வர். SHARE.

Similar News

News October 29, 2025

உலகின் மிகவும் விலையுயர்ந்த Handbag கலெக்‌ஷன்!

image

ஆடம்பரம் என்பது வெறும் டிசைனர் ஆடைகளை அணிவதோ ஆடம்பரமான காரை வைத்திருப்பதோ மட்டுமல்ல. Handbag-களும் முக்கிய இடத்தை பிடிக்கின்றன. அப்படி, உலகின் மிகவும் விலையுயர்ந்த டாப் 6 Handbag-களின் பட்டியலை மேலே கொடுத்துள்ளோம். அவை என்னென்ன என அறிய, போட்டோவை வலது பக்கம் Swipe செய்து பார்க்கவும். இவற்றின் விலைக்கு சென்னையில் ஒரு வீடே வாங்கிவிடலாம், ஆனால் பணக்காரர்கள் கையில் தொங்கவிட்டபடி செல்வார்கள்.

News October 29, 2025

ஓபிஎஸ் அணியில் இருந்து விலகினார்

image

OPS அணியின் மாநில மருத்துவ அணி செயலாளர் Dr.கிருத்திகா, நயினார் நாகேந்திரன் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார். NDA கூட்டணியிலிருந்து விலகிய பிறகு OPS தனது அரசியல் முடிவு குறித்து எதுவும் பேசவில்லை. ஆனால், அவரது செயல்பாடுகள் திமுகவுக்கு ஆதரவாக இருப்பதாக சர்ச்சை வெடித்துள்ளது. இந்நிலையில், அவரது அணியை சேர்ந்த பலரும் அதிமுக, திமுக, பாஜக என பல கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.

News October 29, 2025

பைசனுக்காக ஆளே மாறிப்போன நடிகை அனுபமா!

image

பைசன் படம், அனுபமா பரமேஸ்வரனுக்கு தமிழ் சினிமாவில் புதிய அடையாளத்தை கொடுத்துள்ளது. தனக்கு மக்கள் மனதில் நிற்கும் கதாபாத்திரத்தை கொடுத்த இயக்குநருக்கு ஏற்கெனவே அனுபமா நன்றி தெரிவித்திருந்தார். இதனிடையே பைசன் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட போட்டோஸை இன்ஸ்டாவில் அவர் பகிர்ந்துள்ளார். இதற்கு, கதையோடு ஒன்றி உறவாடிய அவரின் அர்ப்பணிப்பு போட்டோக்களில் வெளிப்படுவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறனர்.

error: Content is protected !!