News October 28, 2025
திண்டுக்கல்: நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திண்டுக்கல் மாவட்டத்தில் மக்களின் குறைகளை நேரில் கேட்டு தீர்க்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை பழனி நகராட்சியில் தேவாங்கர் மண்டபம், ஒட்டன்சத்திரம் வட்டாரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி முத்துநாயக்கன்பட்டி, சாணார்பட்டி வட்டாரத்தில் சமுதாய கூடம் அதிகாரிபட்டி மற்றும் வடமதுரை வட்டாரத்தில் ஊர்மந்தை கொல்லப்பட்டி ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெறும். பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம்.
Similar News
News October 29, 2025
திண்டுக்கல்: ரயில்வேயில் 3,058 பணியிடங்கள் APPLY NOW!

திண்டுக்கல் மக்களே, 2025-ம் ஆண்டுக்கான கமர்சியல் உடன் டிக்கெட் கிளார்க், டைப்பிஸ்ட் போன்ற பணிகளுக்கு 3,058 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு 12th படித்து 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம. மாத சம்பளமாக ரூ.19,900 – ரூ.21,700 வரை வழங்கப்படும்.விருப்பமுள்ளவர்கள் நவ.27ம் தேதிக்குள் https://www.rrbchennai.gov.in/ என்ற
இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர்!
News October 29, 2025
திண்டுக்கல்: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் அதற்கு தனிப் பட்டா பெற நிலத்தை பகிர்ந்து தனியாக மாற்ற வேண்டும். பின்னர், 1.கூட்டு பட்டா, 2.விற்பனை சான்றிதழ், 3.நில வரைபடம், 4.சொத்து வரி ரசீது, 5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம். இந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 29, 2025
JUST IN: நத்தம் அருகே கார் மோதி கணவன்-மனைவி பலி!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே துவரங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோசுகுறிச்சி-கும்பச்சாலை பகுதியில் இன்று அதிகாலை மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் மோதியதில் சாலையில் நடந்து சென்ற கணவன், மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நத்தம் போலீசார் இருவரின் உடலை கைபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


