News October 28, 2025

சட்டவிரோத மண் கடத்தல்: லாரி பறிமுதல்

image

இன்று அக்.28 காரிமங்கலம் மொரப்பூர் மேம்பாலம் அருகே கனிமவளத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த டிப்பர் லாரியை மடக்கினர். லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இந்த லாரி கரகப்பட்டியில் இருந்து சட்ட விரோதமாக மண் கடத்தி வந்தது தெரிந்தது. தொடர்ந்து அதிகாரிகள் லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News October 29, 2025

தனியார் நிறுவனம் நடத்தும் வேலைவாய்ப்பு முகாம்

image

ஓசூரில் அமைந்துள்ள பிரபல தனியார் நிறுவனம் நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் 28.10.2025 முதல் 30.10.2025 வரை மூன்று நாட்கள் நடைபெறுகின்றது. இந்த வேலைவாய்ப்பு முகாம் எஸ்பி வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றுகிறது. இப்பணிக்கு விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தங்கும் வசதி உள்ளது.

News October 29, 2025

தருமபுரி: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

image

இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில், www.tnesevai.tn.gov.in , என்ற தமிழக அரசின் இ-சேவை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். புகைப்படம், கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சமர்பித்து விண்ணப்பிக்கவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News October 29, 2025

தருமபுரி: ரயில்வேயில் 3,058 பணியிடங்கள்.. APPLY NOW!

image

தருமபுரி மக்களே, 2025-ம் ஆண்டுக்கான கமர்சியல் உடன் டிக்கெட் கிளார்க், டைப்பிஸ்ட் போன்ற பணிகளுக்கு 3,058 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 12th படித்து 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம. இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.19,900 – ரூ.21,700 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.27ம் தேதிக்குள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர்!

error: Content is protected !!