News October 28, 2025

சேலம்: விவசாயிகள் கவனத்திற்கு – ஆட்சியர் அறிவிப்பு!

image

சேலம் மாவட்டத்தில் விவசாய தனித்துவ எண் பெறாமல் 26,542 பயனாளிகள் உள்ளனர். இவர்கள் பிரதம மந்திரியின் கௌரவ நிதி 21வது தவணை பெற வேண்டுமெனில் உடனடியாக விண்ணப்பங்களை சமர்ப்பித்து தனித்துவ எண் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார். தனித்துவ எண் பெற்றால் மட்டுமே அனைத்து நல உதவிகளையும் விவசாயிகள் பெற முடியும் என்றும் எச்சரித்துள்ளார்.

Similar News

News November 7, 2025

வாழப்பாடி அருகே அண்ணனை கொன்ற தம்பி!

image

வாழப்பாடி அருகே சேஷன்சாவடியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). இவரது தம்பி ஆறுமுகம் (45). கடந்த 28ஆம் தேதி இவர்களது வீடு தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம், உருட்டுக்கட்டையால் தாக்கியதில் படுகாயம் அடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜேந்திரன் உயிரிழந்தார். இந்நிலையில், அண்ணனை கொலை செய்த ஆறுமுகத்தை வாழப்பாடி போலீசார் கைது செய்தனர்.

News November 7, 2025

ஓமலூர்: வாட்டர் ஹீட்டரால் பெண் பலி!

image

ஓமலுாரை சேர்ந்த கூலித்தொழிலாளி வீராசாமி. இவரது மனைவி கோமதி (41). குடும்பத்துடன் கிச்சிப்பாளையம் காந்தி மகான் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்தனர். இந்நிலையில் கோமதி சுடு நீர் வைக்க வாட்டர் ஹீட்டர் சுவிட்சை போட்டார். அப்போது மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்ட கோமதியை, மகன்கள் சேலம் அரசு மருத் துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் இறந்தது தெரிய வந்தது. கிச்சிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 7, 2025

சேலம்: உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்!

image

சேலம் (நவம்பர் 7) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் 1) அஸ்தம்பட்டி மண்டலம் நேரு கலையரங்கம் 2) சித்தூர் வெங்கடேஸ்வரா திருமண மண்டபம் சித்தூர் 3) ஆத்தூர் அண்ணா கலையரங்கம் ஆத்தூர் 4) வனவாசி முருகேச முதலியார் திருமண மண்டபம் சந்தைப்பேட்டை. 5) தலைவாசல் கவர்பனை நியாய விலை கடை அருகில் 6) தாரமங்கலம் மானாத்தாள் தாண்டனூர் வறுமை ஒழிப்பு கட்டிட வளாகம்.

error: Content is protected !!