News October 28, 2025
பெரம்பலூர்: நாளை மின்தடை அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் துணை மின் நிலையத்தில் நாளை (29-10-2025) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக கரம்பியம், பெரியம்மாபாளையம், வெண்மணி, மேலமாத்தூர், நல்லறிக்கை, புதுக்குடிசை உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை மின் தடை ஏற்படும் என துணை மின் செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.
Similar News
News October 29, 2025
பெரம்பலூர்: உங்க பெயரை மாற்ற சூப்பர் சான்ஸ்!

தங்களது பெயரை மாற்றம் செய்ய விரும்புவோருக்கு புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இணையத்தில் விண்ணப்பிக்க இங்கு <
News October 29, 2025
பெரம்பலூர்: குடும்பத்துடன் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில், உச்சநீதிமன்ற மேல் முறையீடு வழக்கை கைவிட வேண்டும்; நடைமுறையில் இருந்து பறிக்கப்பட்ட செவிலியர் கண்காணிப்பாளர் தரம் 3 ஏ.என்.எஸ் பணியிடங்களை மீண்டும் உருவாக்கிட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செவிலியர்கள் தங்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
News October 29, 2025
பெரம்பலூர்: தொடர் டிரான்ஸ்பார்மர் திருட்டு!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்திற்கு உட்பட்ட அத்தியூர் மற்றும் ஆடுதுறை பகுதிகளில் அடையாளம் தெரியாத நபர்கள் டிரான்ஸ்பார்மர் பெட்டியில் உள்ள காப்பர் காயில் மற்றும் ஆயிலை திருடி சென்றுள்ளனர். இதுமட்டும் அல்லாது பெரம்பலூர் மாவட்டம் பகுதியில் பல்வேறு இடங்களில் இதே போல திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


