News April 18, 2024
வாக்காளர் அடையாள அட்டை இல்லையா?

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களைக் கொண்டு வாக்களிக்கலாம். அதன்படி, பான் கார்டு, ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வங்கி அல்லது அஞ்சலகச் சேமிப்புக் கணக்குப் புத்தகம், ஓய்வூதிய ஆவணம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை அடையாள அட்டை, அரசு ஊழியர்களுக்கான அடையாள அட்டை, மருத்துவக் காப்பீடு, ஸ்மார்ட் கார்டு ஆகியவற்றைக் காட்டி வாக்களிக்கலாம்.
Similar News
News August 17, 2025
51-வது வயதில் பிரபல நடிகைக்கு 2-வது திருமணம்?

நடிகை மலைக்கா அரோரா தனது 2-வது திருமணம் குறித்து மனம் திறந்துள்ளார். தான் மிகவும் ரொமான்டிக் எனவும் தனக்கு காதல் மீது நம்பிக்கை இருப்பதாகவும், ‘So never say never’ என தெரிவித்தார். 51 வயதான மலைக்கா, 1998-ல் அர்பாஸ் கானை திருமணம் செய்து கொண்டு, 2017-ல் விவாகரத்து பெற்றார். 2018-ல் அவர் நடிகர் அர்ஜுன் கபூரை டேட்டிங் செய்ததாகவும் கூறப்பட்டது. இவர் தமிழில் ‘தையா தையா’ பாடலுக்கு நடனமாடி இருந்தார்.
News August 17, 2025
இன்று முதல் ₹5 லட்சம் வரை கடன் பெற முடியும்

தருமபுரிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள CM ஸ்டாலின், இன்று விவசாயிகளுக்கு உடனடி பயிர்க்கடன் வழங்கும் திட்டத்தை சற்றுமுன் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் ஆன்லைனில் விண்ணப்பித்தால், வங்கி கணக்கில் நேரடியாக ₹5 லட்சம் வரை கடன் பெற முடியும். இந்த திட்டத்தின் மூலம் தேவையற்ற அலைச்சல், காலதாமதம் குறையும் என்பதால் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
News August 17, 2025
NDA அணியில் PMK, DMDK இணைய வேண்டும்: கஸ்தூரி

திமுகவை வீழ்த்த, NDA கூட்டணியில் PMK மற்றும் DMDK இணைய வேண்டும் என நடிகை கஸ்தூரி விருப்பம் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் பாஜகவில் இணைந்த அவர் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என நினைக்கவில்லை எனவும், தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் என்றும் கூறியுள்ளார். இது குறித்து உங்கள் கருத்து என்ன?