News October 28, 2025
ஒரே போட்டியில் 8 விக்கெட்.. BCCI-க்கு ஷமி பதிலடி

சர்வதேச போட்டிகளில் தன்னை அணியில் தேர்ந்தெடுக்காததற்கு, ஷமி உள்ளூர் போட்டியில் பதிலடி கொடுத்து வருகிறார். ரஞ்சி டிராபியில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில், முதல் இன்னிங்ஸில் 3, 2-ம் இன்னிங்ஸில் 5 என 8 விக்கெட்களை அவர் கைப்பற்றியுள்ளார். இதனால், அவரது பெங்கால் அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரஞ்சி டிராபியில் இதுவரை 2 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்களை ஷமி கைப்பற்றியுள்ளார்.
Similar News
News October 29, 2025
BREAKING: கூட்டணியில் இணைகின்றனர்.. திடீர் டிவிஸ்ட்

தேமுதிக, 8 தொகுதிகள் என்ற உடன்படிக்கையுடன் திமுக கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2011 தேர்தலுக்கு பிறகு எந்த தேர்தலிலும் வெற்றி பெறாததால் 2026 தேர்தலை தேமுதிக மிக முக்கியமானதாக கருதுகிறது. இதனால், வெற்றி வாய்ப்புள்ள கூட்டணியில் சேர நிர்வாகிகள் தலைமைக்கு அறிவுறுத்தி வருகின்றனர். மற்றொருபுறம் ராமதாஸை திமுக கூட்டணியில் சேர்க்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
News October 29, 2025
தட்டையான வயிறு பெற இந்த பயிற்சி பண்ணுங்க!

தட்டையான வயிற்றை பெற Bicycle Crunches பண்ணுங்க ★தரையில் மல்லாந்து நேராக படுக்கவும். 2 கைகளையும் தலையின் பின்னால் வைத்து, 2 கால்களையும் முட்டிவரை மடக்கி வைக்கவும். இப்போது, இடது காலை மார்பு நோக்கி கொண்டு வரும்போது, வலது முழங்கை அதை தொடும் வகையில் உடலை மடக்கவும். அடுத்து வலது காலை கொண்டு வரும்போது, இடது முழங்கையை தொடவும். இப்படி மாறி மாறி செய்யவும். ஒரு நிமிடத்திற்கு 5–6 முறை செய்யலாம்.
News October 29, 2025
டிரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்க ஜப்பான் ஆதரவு

டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க, ஜப்பான் PM சனே தகைச்சி ஆதரவு தெரிவித்துள்ளார். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு கிடைக்கும் என மிகவும் எதிர்பார்த்த டிரம்ப்புக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்தியா – பாக்., மோதல் உள்பட 7 போர்களை தான் நிறுத்தியதாகவும் இன்று வரை டிரம்ப் கூறி வருகிறார். இந்நிலையில் தான், ஜப்பான் PM மூலம் மீண்டும் நோபல் பரிசு கோரிக்கை எழுந்துள்ளது.


