News October 28, 2025
மாதவரம்: சாலையில் தேங்கிய மழை நீர் அகற்றும் பணி!

சென்னை: மாதவரம் பகுதியில் சாலையில் தேங்கியுள்ள மழைநீரை சென்னை மாநகராட்சி பணியாளர்களால் அகற்றி வருகின்றனர். சென்னையில் நேற்று(அக்.27) முதல் மிதமான மழை பெய்து வரும் நிலையில் பல்வேறு சாலைகளில் மழை நீர் தேங்கி வருகிறது. இதனை உடனடியாக அப்புறப்படுத்தும் வகையில் நீர் உறிஞ்சும் லாரியை கொண்டு மாநகராட்சி பணியாளர்கள் நீரை அகற்றி வருகின்றனர்.
Similar News
News October 29, 2025
சென்னை மாவட்டத்தில் தாலுகா வாரியாக மழை நிலவரம்

சென்னை மாவட்டத்தில் நேற்று (அக்.28) காலை முதல் இன்று காலை மணி வரை மழை பெய்த விவரங்கள் வெளியாகியுள்ளது. இதனால் அயனாவரம்-11, எழும்பூர் – 8.9, கிண்டி – 6.6, மாம்பலம்-9.2, மயிலாப்பூர்-8.6, பெரம்பூர் – 13.3, புரசைவாக்கம் – 8.4, தண்டையார்பேட்டை-12.2, ஆலந்தூர் – 8.8, அம்பத்தூர் – 9, சோழிங்கநல்லூர் – 9.6 என மழை மில்லி மீட்டரில் பதிவாகியுள்ளது என தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
News October 29, 2025
சென்னை: ரயில்வேயில் 3,058 பணியிடங்கள்.. APPLY NOW!

சென்னை மக்களே, 2025-ம் ஆண்டுக்கான கமர்சியல் உடன் டிக்கெட் கிளார்க், டைப்பிஸ்ட் போன்ற பணிகளுக்கு 3,058 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 12th படித்து 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம. இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.19,900 – ரூ.21,700 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.27ம் தேதிக்குள் <
News October 29, 2025
சென்னையில் இன்று 116 சிறப்பு மருத்துவ முகாம்கள்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு இன்று (அக் 29) மண்டல வாரியாக திருவொற்றியூர்-3, மணலி-3, மாதாவரம்-3, தண்டையார்பேட்டை-4, இராயபுரம் – 3, திரு.வி.க. நகர் – 9, அம்பத்தூர் – 10, அண்ணாநகர் – 21, தேனாம்பேட்டை – 3, கோடம்பாக்கம் – 9, வளசரவாக்கம் – 3, ஆலந்தூர் – 12, அடையார் – 13, பெருங்குடி – 11, சோழிங்கநல்லூர் – 9 முகாம்கள் என 116 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.


