News October 28, 2025
தமிழகத்தில் SIR நடவடிக்கைக்கு எதிர்ப்பு: சீமான்

தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கையை நாதக ஏற்காது என சீமான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். புலம் பெயர் தொழிலாளர்கள் இங்கு வந்து வேலை செய்யட்டும், ஆனால் அவர்களது மாநிலத்திற்கு சென்றுதான் வாக்களிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக CM ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு நாதகவை அழைக்க மாட்டார்கள் என கூறிய அவர், சென்றாலும் எந்த பயனும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
Similar News
News October 29, 2025
ODI-யில் உச்சம் தொட்ட ஹிட்மேன்!

ICC வெளியிட்டுள்ள ODI பேட்ஸ்மேன்களின் தரவரிசையில், 781 புள்ளிகளுடன் ரோஹித் சர்மா முதல் இடம் பிடித்துள்ளார். நடந்து முடிந்த, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ODI தொடரில் அவர் ஒரு சதம், ஒரு அரைசதத்தை விளாசி, தொடர் நாயகன் விருதை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 38 வயதான ரோஹித் ஓய்வு பெற வேண்டும் என கருத்துக்கள் எழுந்த நிலையில், தனது பேட்டால் விமர்சனங்களுக்கு ஹிட்மேன் பதிலளித்துள்ளார்.
News October 29, 2025
வருமானத்தில் 80% நடிகருக்கு செல்கிறது: செல்வமணி

இன்று பல சூப்பர் ஸ்டார்களை, நடிகர்களை உருவாக்கிய தயாரிப்பாளர்கள் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டதாக இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேதனை தெரிவித்துள்ளார். படத்தின் மொத்த வருமானத்தில் 80% நடிகர்கள் எடுத்து செல்வதால், தயாரிப்பாளர்களால் அடுத்தடுத்து படம் எடுக்க முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஒரு படம் யாரால் வெற்றியடைகிறது என நடிகர்களுக்கு தெரியவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.
News October 29, 2025
விஜய்யுடன் இணைந்து களமிறங்குகிறார்

அரசியல் களத்தில் விஜய்க்கு ஆதரவாக அவரது தந்தை SAC களமிறங்குகிறார். அதற்கான முன்னெடுப்பாகவே, N.ஆனந்த் எதிர்ப்பாளர்கள் மூவருக்கு தவெக நிர்வாக குழுவில் இடம் அளிக்கப்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். அந்த மூவரும், விஜய்யின் தந்தை SA சந்திரசேகரின் ஆதரவாளர்கள். கருணாநிதி, MGR, ஜெயலலிதா என 3 முதல்வர்களுடன் SAC பயணம் செய்துள்ளார். இது விஜய்க்கு பக்க பலமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.


