News October 28, 2025
சற்றுமுன்: விடுமுறை… 3 நாள்களுக்கு சிறப்பு அறிவிப்பு

வார விடுமுறையையொட்டி 3 நாள்களுக்கு சுமார் 1,000 ஸ்பெஷல் பஸ்கள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, கிளாம்பாக்கத்தில் இருந்து அக்.31, நவ.1-ல் 690 பஸ்களும் இயக்கப்படும் என்றும் கோயம்பேடு, மாதவரத்தில் இருந்து 150 பஸ்களும் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நவ.2 அன்று பணியிடங்களுக்கு திரும்புவதற்கு ஏதுவாகவும் கூடுதல் பஸ்கள் இயக்கப்படவுள்ளன. SHARE IT.
Similar News
News October 29, 2025
சொகுசு ரயில்களில் பயணம் செய்ய எவ்வளவு தெரியுமா?

இந்தியாவின் சொகுசு ரயில்கள் சுற்றுலாவுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தையும், இயற்கை அழகையும் வெளிப்படுத்தும் வகையில் பயண அனுபவங்களை வழங்குகின்றன. இந்த ரயில்களில், பிரபலமான சுற்றுலா தளங்களுக்கு, ஒருவார பயணமாக சென்றுவரலாம். எந்த ரயில்களில், எவ்வளவு கட்டணம் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க.
News October 29, 2025
இளைஞர்களின் எதிர்காலத்தை நாசமாக்கிய NDA: ராகுல் காந்தி

பிஹார் இளைஞர்களின் கனவு & ஆசைகளை மோடி, நிதிஷ்குமார் தலைமையிலான NDA கூட்டணி அழித்து விட்டதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், பிஹார் எல்லா வளர்ச்சி குறியீடுகளிலும் பின்தங்கியே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிஹார் இளைஞர்களின் எதிர்காலத்தையும் மோடி – நிதிஷ் இணைந்து நாசமாக்கியதாகவும் காட்டமாக விமர்சித்துள்ளார்.
News October 29, 2025
Cinema Roundup: விரைவில் ‘பராசக்தி’ பர்ஸ்ட் சிங்கிள்

*’பராசக்தி’ பர்ஸ்ட் சிங்கிள் வரும் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் வெளியாகும் என தகவல். *யஷ்-ன் ‘டாக்ஸிக்’ படத்தின் பெரும்பாலான காட்சிகளை ரீ-ஹூட் செய்ய படக்குழு முடிவு. *மிருணாள் தாக்கூரின் ‘டகாய்ட்’ படம் மார்ச் 19-ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு. *மாரி செல்வராஜுக்கு ‘இயக்குநர் திலகம்’ என வைகோ பட்டம் சூட்டியுள்ளார்.


