News October 28, 2025

சிவகாசியில் பட்டாசு ஆலைகளை திறப்பதில் சிக்கல்

image

சிவகாசி பகுதியில் அக்.31 அன்று பட்டாசு ஆலைகளை திறந்து அடுத்த ஆண்டு தீபாவளிக்கான உற்பத்தியை தொடங்க சிலர் முடிவு செய்துள்ளனர். சில பட்டாசு ஆலைகள் பிரதோஷமான நவ.3 அன்று சிறப்பு பூஜையுடன் உற்பத்தியை தொடங்க உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக பட்டாசு ஆலைகளை விரைவில் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

Similar News

News October 29, 2025

ஸ்ரீவி: மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு ஆயுள்

image

கூமாப்பட்டி கிழவன்கோவிலை சேர்ந்தவர் செல்வகணேஷ். இவரது மனைவி சுமதிக்கும், பேருந்து ஓட்டுனர் ராமச்சந்திரனுக்கும் தவறான பழக்கம் ஏற்பட்டது. இதனை செல்வகணேஷ் கண்டித்துள்ளார். சுமதி, ராமச்சந்திரன், நண்பர் வேல்முருகன் ஆகியோர் சேர்ந்து செல்வகணேசை கொலை செய்தனர். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி சுமதி, ராமச்சந்திரன் ஆகிய இருவருக்கும் ஆயுள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.வேல்முருகன் விடுதலையானார்.

News October 28, 2025

சாத்தூர்: மணல் திருடியவருக்கு ஓராண்டு சிறை

image

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மணியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மரியசெல்வம்(39). இவர் கடந்த 2014-ம் ஆண்டு கோல்வார்பட்டி அணை பகுதியில் டிராக்டரில் மணல் திருட்டில் ஈடுபட்டுள்ளார். இந்த வழக்கு இன்று சாத்தூர் சார்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முத்துமகாராஜன் மணல் திருடிய மரிய செல்வத்திற்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

News October 28, 2025

விருதுநகர்: 12th முடித்தால் HEALTH INSPECTOR வேலை.,

image

விருதுநகர் மக்களே, தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) காலியாக உள்ள 1429 Health Inspector Grade-II பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12வது தேர்ச்சி பெற்ற 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் நவ.16க்குள் இங்கு <>கிளிக் செய்து <<>>விண்ணப்பிக்கவும். சம்பளம் ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இந்த நல்ல வாய்ப்பை SHARE செய்யுங்க.

error: Content is protected !!