News October 28, 2025
பள்ளிக்கரணை விவகாரம்.. தமிழக அரசு விளக்கம்

பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் கட்டுமானங்களுக்கு அனுமதி தரவில்லை என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. அனுமதி வழங்கியதாக வெளியான செய்திகள் ஆதாரமற்றவை என்றும், சதுப்பு நில எல்லைகளுக்கு வெளியே உள்ள தனியார் பட்டா இடங்களுக்கு மட்டுமே அலுவலர்கள் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் TN அரசு கூறியுள்ளது. அங்கு ராம்சார் தலம் அமையும் இடம் இன்னும் புல எண்களுடன் வரையறுக்கப்படவில்லை என்று TN அரசு கூறியுள்ளது.
Similar News
News October 28, 2025
உலகை விட்டு மறைந்தார்

நடிகரும் பாடலாசிரியருமான கவிஞர் சினேகனின் தந்தை சிவசங்கு(102) நேற்று அதிகாலை காலமானார். தஞ்சை புது காரியாப்பட்டியில் உள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. உறவினர்கள், கிராமத்தினர் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து, இன்று சிவசங்குவின் உடலுக்கு குடும்பத்தினர் இறுதிச் சடங்குகள் செய்தனர். அதன்பின், அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. RIP
News October 28, 2025
Aggressive அபிஷேக்கை எதிர்கொள்ள தயார்: மார்ஷ்

IND vs AUS மோதும் முதல் டி20 போட்டி நாளை தொடங்க உள்ளது. இந்நிலையில், Aggressive பேட்ஸ்மேனான அபிஷேக் ஷர்மாவை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருப்பதாக ஆஸி., கேப்டன் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார். மிகவும் திறமை வாய்ந்தவர் அபிஷேக் என பாராட்டியுள்ளார். அவர் நிச்சயம் எங்களுக்கு சவாலாக இருப்பார் எனவும், இதுபோன்ற வீரர்களை எதிர்கொண்டுதான், தங்களின் திறனை பரிசோதிக்க முடியும் என்றும் மார்ஷ் கூறியுள்ளார்.
News October 28, 2025
தவெக நிர்வாகக் குழு கூட்டம் கூடுகிறது

தவெக நிர்வாகக் குழு கூட்டம் நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் N.ஆனந்த் அறிவித்துள்ளார். இதில் விஜய்யின் அடுத்தக்கட்ட சுற்றுப்பயணம், 2026 தேர்தல் வியூகம், கட்சியை வலுப்படுத்துதல், தொண்டர் படை உருவாக்கம் குறித்து
ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது. விஜய் அறிவித்த புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


