News October 28, 2025

மதுரை – துபாய் விமானத்தில் நடுவானில் கோளாறு

image

மதுரை விமான நிலையத்திலிருந்து துபாய் செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானம் மதியம் புறப்பட்ட சில நேரத்தில் நடுவானில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், விமானி உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் விமானம் சென்னையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. 173 பயணிகள் இருந்த அந்த விமானம் ஆய்வுக்குப் பிறகு சுமார் 8 மணி நேர தாமதத்திற்கு பின் புறப்பட்டது.

Similar News

News October 29, 2025

ரோட்டில் கிடந்த ரூ.17.50 லட்சம் ஒப்படைப்பு

image

மதுரை ரோட்டில் கிடந்த ரூ.17.50 லட்ச பணத்தை பழைய பேட்டரிகளை வாங்கி விற்கும் மகேஷ் என்பவர் அந்த பணத்திற்கு உரிமை கோரினார். வசூல் பணத்தை ஆட்டோவில் கொண்டு சென்றபோது தவறி விழுந்ததாக கூறி, அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்தார். ஆனால் போலீசார் சம்பந்தப்பட்ட பணத்தை வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர். ஆவணங்கள் சரியாக இருந்தால் அப்பணத்தை வருமான வரித்துறையினர் அவரிடம் ஒப்படைப்பர் என போலீசார் தெரிவித்தனர்.

News October 29, 2025

மதுரை: உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கா?

image

மதுரையில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களில், இந்த மாதம் 31ஆம் தேதி வரை 6 மாதம் முதல், 6 வயது வரையான குழந்தைகளுக்கு, ‘வைட்டமின் ஏ’ திரவம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. குழந்தைகளுக்கு கண் குருடு, குடல், சிறுநீர், சுவாசப் பாதைகள் மற்றும் தோல் போன்ற உறுப்புகளை தொற்றிலிருந்து பாதுகாக்க ‘வைட்டமின் ஏ’ உதவுகிறது. எனவே மறவாமல் குழந்தை வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 29, 2025

மதுரயைில் இன்று, நாளை போக்குவரத்து மாற்றம்

image

தேவர் ஜெயந்தி விழாவுக்கு வரும் வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களுக்கு எம்.எம்., லாட்ஜ் சந்திப்பு, தமுக்கம் சந்திப்பு, சிவசண்முகம் பிள்ளை சாலை சந்திப்பு, மீனாட்சி கல்லுாரி தரைப்பாலம் சந்திப்பு ஆகிய சாலைகளில் இருந்து கோரிப்பாளையம் சந்திப்புக்கு செல்ல அனுமதி இல்லை. ஆம்புலன்ஸ் வாகனங்கள் தத்தனேரி மெயின் ரோடு, தமுக்கம், வள்ளுவர் சிலை சந்திப்பில் இருந்து வரக்கூடிய ஆம்புலன்ஸ்கள் வழக்கமான வழியிலேயே செல்லலாம்.

error: Content is protected !!