News October 28, 2025
பரிசு தொகையை உயர்த்தி வழங்கியிருக்கலாம்: கார்த்திகா

கபடியில் தங்கம் வென்று கண்ணகி நகரை பெருமைப்படுத்திய கார்த்திகாவுக்கு தமிழக அரசு ₹25 லட்சம் பரிசு தொகை வழங்கியிருந்தது. இந்த தொகையை உயர்த்தி வழங்கவேண்டும் என சீமான், திருமா, இபிஎஸ், வேல்முருகன் என பலர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், தனக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்கியிருக்கலாம் என கபடி வீராங்கனை கார்த்திகாவே பேசியிருக்கிறார். TN அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா?
Similar News
News October 29, 2025
ரஷ்மிகாவுக்கு இருக்கும் உச்சபட்ச ஆசை இதுதான்

மற்ற துறைகளை போல சினிமாவிலும் 8 மணி நேரம் மட்டுமே வேலை பார்க்க வேண்டும் என ஆசைப்படுவதாக ரஷ்மிகா தெரிவித்துள்ளார். சினிமாவில் உள்ள அனைவருக்கும் குடும்பமும் தனிப்பட்ட வாழ்க்கையும் இருக்கிறது என கூறிய அவர், குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்புவதாக கூறியுள்ளார். மேலும், அதிகமாக வேலை செய்து ஆரோக்கியத்தை கவனிக்காமல் விட்டு விட்டேனே என பிற்காலத்தில் கவலைப்பட விரும்பவில்லை எனவும் பேசியுள்ளார்.
News October 29, 2025
மழை வெளுக்கப் போகுது.. 14 மாவட்டங்களில் உஷார்!

தமிழகத்தின் சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்றிரவு 10 மணி வரை கோவை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், குமரி, தென்காசி, தேனி, நெல்லை, செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், சிவகங்கை, திருவள்ளூர், திருவாரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதனால், இரவில் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிருங்கள் நண்பர்களே!
News October 29, 2025
வியக்க வைக்கும் உண்மைகள்

விண்வெளி என்பது நம்மால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத பல்வேறு அதிசயங்கள் நிறைந்தவை. கோடிக் கணக்கான நட்சத்திரங்களுடன் மின்னும் விண்வெளி தொடர்பாக பல வியக்கும் உண்மைகள் உள்ளன. அவை என்னென்ன என்று மேலே, போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், உங்களை வியக்க வைத்த உண்மை எது? கமெண்ட்ல சொல்லுங்க.


