News October 28, 2025
தீவிர புயல்: 13 மாவட்டங்களில் மழை வெளுக்கும்

மொன்தா புயல் இன்று இரவு கரையை கடக்கவுள்ள நிலையில், வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மாலை 4 மணி வரை சென்னை, செங்கை, திருவள்ளூர், கோவை, காஞ்சி, குமரி, ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, நீலகிரி, நெல்லை, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய 13 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. ஆகையால், வெளியே செல்பவர்கள் பாதுகாப்புடன் இருங்கள். SHARE IT
Similar News
News October 28, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. வந்தாச்சு புதிய அப்டேட்

5 ஏக்கர் நன்செய், 10 ஏக்கர் புன்செய் நிலம் வரை வைத்திருப்பவர்கள் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியானவர்கள். ஆனால், விண்ணப்பிக்கும்போது நில ஆவண விவரங்கள் கேட்கப்பட்டிருக்காது. இதனால், தங்களுக்கு ₹1,000 கிடைக்குமா என பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது. அவர்கள் அச்சப்பட தேவையில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களுக்கு நவம்பரில் அரசிடம் இருந்து குறுஞ்செய்தி அனுப்பப்பட உள்ளதாம். SHARE IT
News October 28, 2025
BREAKING: கரையை கடக்கத் தொடங்கியது புயல்

மொன்தா புயல் கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. ஆந்திராவின் மச்சிலிப்பட்டிணம் – கலிங்கப்பட்டிணம் இடையே சற்றுநேரத்திற்கு முன்பு கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. புயல் முழுமையாக கரையை கடக்க 3 – 4 மணி நேரம் ஆகலாம் என IMD கணித்துள்ளது. புயல் எதிரொலியாக ஆந்திரா, ஒடிசா, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
News October 28, 2025
ஓய்வு பெறுகிறாரா ரஜினி? சோகத்தில் ரசிகர்கள்

சினிமாவில் இருந்து ரஜினிகாந்த் ஓய்வு பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அபூர்வ ராகங்களில் கமலுடன் நடித்து திரையுலக பயணத்தை தொடங்கியது போல, நெல்சன் இயக்கத்தில் அவருடன் நடித்து ஓய்வு பெற ரஜினி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் கதை விரிவாக்க பணிகளில் நெல்சன் ஈடுபட்டுள்ளதாகவும், படப்பிடிப்பு 2027-ல் தொடங்கும் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.


