News October 28, 2025
தூத்துக்குடி: இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை

தூத்துக்குடி மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க….
Similar News
News October 29, 2025
தூத்துக்குடி மக்களுக்கு மாநகராட்சி முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடி மாநகராட்சியின் சார்பில் பொதுமக்கள் குறைகளை நேரில் களையும் வகையில் மண்டல வாரியாக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தெற்கு மண்டல பகுதி மக்களுக்கான குறை தீர் கூட்டம் நாளை (அக். 30) மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் வைத்து மேயர் ஜெகன் தலைமையில் நடைபெறும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
News October 28, 2025
தூத்துக்குடி இன்று இரவு ஹலோ போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News October 28, 2025
கோவில்பட்டி வீரரை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

பஹ்ரைன் Asian Youth Games 2025-ல் இந்தியாவிற்காக 2 வெள்ளிப் பதக்கங்களை கோவில்பட்டியை சேர்ந்த பளுதூக்கும் வீரர் மகாராஜன் ஆறுமுகபாண்டியன் வென்றுள்ளார். இதனை குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில், கோவில்பட்டி என்றால் இனிப்பு, ஹாக்கி மட்டுமல்ல, பளு தூக்குதலும் இனி நம் நினைவுக்கு வரும்படி சாதனை படைத்துள்ள மகாராஜன் ஆறுமுகப்பாண்டியனுக்கு என் பாராட்டுகள் என தெரிவித்துள்ளார்.


