News October 28, 2025
காஞ்சிபுரம்: ரோடு சரியில்லையா? புகார் அளிக்கலாம்

காஞ்சிபுரம் மக்களே; உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பு இன்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க. அந்த சாலையை புகைப்படம் எடுத்து நம்ம சாலை செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதனை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்
Similar News
News October 29, 2025
காஞ்சி: 1022 ஏரிகளில் 159 ஏரிகள் முழுக் கொள்ளளவு நிரம்பின

காஞ்சிபுரம் பாலார் நீர்ப்பாசனப் பிரிவு அறிக்கையின்படி, 28.10.25 காலை 6.00 மணியளவில் 1022 ஏரிகளில் 159 ஏரிகள் முழுக் கொள்ளளவு வரை நிரம்பியுள்ளன. 168 ஏரிகள் 76-99% அளவிலும், 314 ஏரிகள் 51-75% அளவிலும், 289 ஏரிகள் 26-50% அளவிலும் நிரம்பியுள்ளன. 88 ஏரிகளில் 25% இற்கும் குறைவான நீர்மட்டமே உள்ளது. காஞ்சிபுரம் பகுதியில் 114 மி.மீ, செங்கல்பட்டு 132.20 மி.மீ., டூசி பகுதியில் 8.20 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
News October 29, 2025
காஞ்சிபுரத்தில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (அக்.28) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News October 29, 2025
காஞ்சிபுரத்தில் 219 “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் நிறைவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் ஜூலை முதல் அக்டோபர் வரை 224 முகாம்கள் திட்டமிடப்பட்டு, 219 முகாம்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், தெரிவித்துள்ளார். மேலும், அக்டோபர் 29 மற்றும் 31 தேதிகளில் வெங்காடு மற்றும் பிள்ளைப்பாக்கம் கிராமங்களில் முகாம்கள் நடைபெற இருப்பதாகவும் கூறினார்.


