News October 28, 2025

அரியலூர்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். மேற்கண்ட தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News October 29, 2025

அரியலூர்: கோயிலில் திருடிய 4 பேர் கைது

image

நெருஞ்சிக்கோரை கிராமத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோயிலில் கடந்த 23-ம் தேதி மர்மநபர்கள் சிலர் பூட்டை உடைத்து, கோயிலில் உள்ள பித்தளை பாத்திரங்கள் மற்றும் பூஜை பொருட்களை திருடிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுதொடர்பாக அரியலூர் நகர போலீசார் மணிவேல் (50), ராஜீவ்காந்தி (35), சின்னதம்பி (24), செல்லமுத்து (49) ஆகியோரை கைது செய்தனர். இதையடுத்து 4 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

News October 29, 2025

அரியலூர்: இறப்பிலும் இணைபிரியாத தம்பதி!

image

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் ஐயப்பன் நாயக்கன் பேட்டை கிராமத்தில் தனசாமி-ராணி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களில் ராணி உடல்நலக் குறைவினால் திங்கட்கிழமை (அக்.27) உயிரிழந்தார். இறுதிச் சடங்கு நேற்று (அக்.28) நடைபெற்ற நிலையில், அவரது கணவராகிய தனசாமி மயங்கிய நிலையில் கீழே விழுந்து உயிரிழந்தார். இறப்பிலும் இணைபிரியாமல் இருந்த தம்பதியினரை நினைத்து அக்கிராம மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.

News October 29, 2025

அரியலூர்: ரோந்து பணி செல்லும் காவலர் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில், இரவு முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!