News October 28, 2025
கல்லூரியில் வேலை, ₹1,82,400 வரை சம்பளம்; APPLY NOW

தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 2,708 பணியிடங்கள் காலியாக உள்ளன. மாதம் ₹57,700 முதல் ₹1,82,400 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு முதுகலை பட்டப்படிப்பில் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், UGC/CSIR NET (அ) SLET/SET-ல் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். தகுதியுள்ளவர்கள் <
Similar News
News October 29, 2025
BREAKING: அமைச்சர் நேரு கைதாகிறாரா?

நகராட்சி நிர்வாகத்துறையில் 2,538 பணியிடங்களுக்கு பணம் பெற்றுக்கொண்டு வேலை வழங்கப்பட்டுள்ளதாக ED கூறியுள்ளது. அமைச்சர் நேரு, அவரது சகோதரர் வீடுகளில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில், நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு ED கடிதம் எழுதியுள்ளது. போக்குவரத்து துறையில் வேலைக்காக லஞ்சம் பெற்றதாக எழுந்த புகார் தொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜி சிறை சென்றார். அதே பாணியில் நேரு கைதாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News October 29, 2025
‘DUDE’ படம் அருவருப்பா இருக்குது: மோகன் ஜி

இன்னொருத்தருக்கு பிறந்த குழந்தைக்கு, ஹீரோ தன்னோட இனிஷியல் போட்டுக்க, அவங்க வீட்ல பர்மிஷன் கொடுக்கிறத பார்க்கும்போது அருவருப்பா இருக்கு என ‘Dude’ படம் குறித்து மோகன் ஜி தெரிவித்துள்ளார். இப்படம் அடுத்த தலைமுறைக்கு தவறான உதாரணம் என குறிப்பிட்ட அவர், மிகவும் முற்போக்காக செல்கிறோம் என்ற நினைப்பில் இப்படி ஒரு படத்தை எடுத்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் கூறியுள்ளார். உங்க கருத்து என்ன?
News October 29, 2025
ஸ்டாலினுக்கும் விஜய்க்கும் இதுதான் வித்தியாசம் : அப்பாவு

ஒரு பிரச்னை என்றதும், சம்பவ இடத்துக்கு இரவோடு இரவாக செல்லும் பழக்கம் கொண்டவர் CM ஸ்டாலின் என அப்பாவு தெரிவித்துள்ளார். ஆனால் விஜய்யோ இந்த நேரம் தூங்கி இந்த நேரம் எழ வேண்டும், இவ்வளவு தூரம்தான் பயணிக்கணும் என ஷெட்யூல் வைத்து அரசியல் செய்பவர் என பேசியுள்ளார். கரூர் துயரில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை விஜய் சென்னைக்கு வரவழைத்து ஆறுதல் கூறியது அரசியலில் ஒரு கரும்புள்ளி எனவும் கடுமையாக சாடினார்.


