News October 28, 2025
மருத்துவ சின்னங்களில் ஏன் பாம்பு உள்ளது தெரியுமா?

உலகளவில் மருத்துவ சின்னங்களில் பாம்பு இடம்பெற்றிருக்கும். WHO-வின் Logo-விலும் பாம்பு இருப்பதை நம்மால், பார்க்க முடியும். ஆனால், பாம்புக்கும், மருத்துவத்துக்கும் என்ன சம்பந்தம் என தெரியுமா? கிரேக்க புராணங்களின் படி, மருத்துவ தெய்வமான அஸ்கிளேபியஸ்(Asclepius) கையில் பாம்பு சுற்றிய தடியை (Rod of Asclepius) வைத்திருந்தார். அதன் வெளிப்பாடாகவே மருத்துவ சின்னங்களில் பாம்பு இடம்பெறுவதாக கூறப்படுகிறது.
Similar News
News October 29, 2025
குல்தீப் or அர்ஷ்தீப் சிங்.. இன்று விளையாட போவது யார்?

ஆஸி., அணிக்கு எதிரான முதல் T20 போட்டியில் இந்திய அணியில் பவுலர்களாக யார் யார் இடம்பெறுவார்கள் என்ற குழப்பம் நீடிக்கிறது. பும்ரா, வருண் ஆகியோருடன் ODI-யில் சிறப்பாக செயல்பட்ட ராணாவும் இருப்பார் என்றே நம்பப்படுகிறது. ஆல்ரவுண்டர்களாக துபே & அக்சர் இடம்பெறும் நிலையில், அணியில் ஒரு இடம் மட்டுமே பாக்கி இருக்கும். அதற்கு, குல்தீப் & அர்ஷ்தீப் இடையே போட்டி நிலவும். இருவரில் யார் அணியில் இடம்பெறலாம்?
News October 29, 2025
விலை ₹4,000 வரை உயருகிறது

மெமரி ‘சிப்’ தட்டுப்பாடு காரணமாக வரும் புத்தாண்டு முதல் 5%-10% வரை செல்போன்களின் விலை உயரும் என தகவல் வெளியாகியுள்ளது. டிரெண்ட் போர்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் எல்பிடி, டிஆர்4 X, என்ஏஎன்டி பிளாஷ் மெமரி சிப்களின் விநியோகம் கணிசமாக குறைந்துள்ளது. இதனால், உற்பத்தி செலவுகள் அதிகமாவதால் அதனை ஈடுசெய்ய விலையை உயர்த்த செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
News October 29, 2025
₹44,900 சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க

புலனாய்வு துறையில் உள்ள 258 கிரேடு 2 தொழில்நுட்ப பிரிவு பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: எலக்ட்ரிக்கல், டெலி கம்யூனிகேஷன் உள்ளிட்டவற்றில் டிகிரியுடன் கேட் தேர்ச்சி கட்டாயம். வயது வரம்பு: 18 – 27. சம்பளம்: ₹44,900 – ₹1,42,400. விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.16. மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <


