News October 28, 2025
விழுப்புரத்தில் கிராம சபைக் கூட்டம்!

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நவம்பர் 1ஆம் தேதி கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை, டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. ஆகையால், பொதுமக்கள் இதில் தவறாது பங்கேற்குமாறு மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் கேட்டுக்கொண்டுள்ளார்.
Similar News
News October 29, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(அக்.28) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 28, 2025
விழுப்புரம்: 10க்கும் மேற்பட்டோருக்கு நாய் கடி!

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திக்குப்பம் பகுதிகளில் இன்று (ஆக.28) 10க்கும் மேற்பட்ட முதியோர்களையும், பெண்களையும் தெரு நாய்கள் கடித்தன. இச்சம்பவத்தை பேரூராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் கண்டுகொள்ளாததால் பாதிக்கப்பட்டோர் வேதனையடைந்துள்ளனர். மேலும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
News October 28, 2025
விழுப்புரம்: ரோடு சரியில்லையா? புகார் அளிக்கலாம்

விழுப்புரம் மக்களே; உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பு இன்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க. அந்த சாலையை புகைப்படம் எடுத்து நம்ம சாலை செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதனை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்க.


