News October 28, 2025
புதுவை: ஏனாமில் பேரிடர் மீட்புக்குழு வருகை

மோன்தா புயல் இன்று மாலை ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி காக்கிநாடா அருகிலுள்ள புதுவை பிராந்திய பகுதியான ஏனாமிற்கும் புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக விசாகப்பட்டினத்தில் இருந்து ஏனாமிற்கு தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் வந்துள்ளனர். மேலும் புதுவையிலிருந்து ஐ.ஆர்.பி.என். வீரர்களும் பாதுகாப்பு பணிக்கு வந்துள்ளனர்.
Similar News
News October 29, 2025
புதுச்சேரி: கத்தியுடன் சுற்றித்திரிந்தவர் கைது

கோரிமேடு சப்-இன்ஸ்பெக்டர் முத்தையன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தட்டாஞ்சாவடி மார்க்கெட்டிங் வளாகத்தில் சந்தேகப்படும்படி சுற்றி திரிந்த ஒருவரை பிடித்து சோதனையிட்டனர். சோதனையில் அவர் கத்தியை மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. விசாரணையில் தட்டாஞ்சாவடி இசக்கி (22) என்பதும், அவர் மீது அடிதடி வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து கோரிமேடு போலீசார் கைது செய்தனர்.
News October 28, 2025
காரைக்கால்: பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

காரைக்கால் அடுத்த திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்துகுட்பட்ட பகுதிகளில் உள்ள காலிமனைகளில் மழைநீர் தேங்குவதாகவும், அதனால் சுகாதார கேடு ஏற்படுவதாகவும் புகார்கள் வருகின்றன. எனவே, மனைகளின் உரிமையாளர்கள் தங்களுக்கு சொந்தமாக உள்ள காலிமனைகளில் மழைநீர் தேங்காதவாறு தங்களது சொந்த முயற்சியில் சுத்தமாக பராமரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
News October 28, 2025
புதுச்சேரி: சுகாதாரத்துறை அதிகாரிகள் கைது

புதுச்சேரி மாநிலத்தில் தரமற்ற மாத்திரைகள் கொள்முதல் செய்ததாக விசாரணை நடத்தியதில், அதில் மருந்துகள் தரமற்றது என்பது தெரியவந்தது. இதில் சுகாதாரத்துறை முன்னாள் உயர் அதிகாரிகள் கைது, முன்னாள் இயக்குநர்கள் ராமன், மோகன்குமார் மற்றும் துணை இயக்குநர் அல்லி ராணி ஆகிய மூவரையும் கைது செய்யப்பட்டார். மேலும் லஞ்ச ஓழிப்பு போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


