News October 28, 2025
நேற்று விஜய் சென்ற ரிசார்ட்டில் இன்று CM ஸ்டாலின்!

2026 தேர்தலுக்காக திமுக பல முன்னேற்பாடுகளை செய்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக ‘என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி’ என்ற தலைப்பில் கட்சி நிர்வாகிகளுக்கு CM ஸ்டாலின் பயிற்சி வழங்குகிறார். இதில், MP, MLA, மாவட்ட செயலாளர்கள், கிளை செயலாளர் என சுமார் 3,000 பேர் பங்கேற்றுள்ளனர். கரூர் மக்களை நேற்று விஜய் சந்தித்த அதே மாமல்லபுரம் ரிசார்ட்டில்தான் திமுகவின் இக்கூட்டமும் இன்று நடைபெறுகிறது.
Similar News
News October 29, 2025
இன்று IND vs AUS முதல் டி20 போட்டி

ஆஸி.,வில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இன்று 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை தொடங்குகிறது. முன்னதாக, கில் தலைமையில் விளையாடிய 3 ODI போட்டிகள் கொண்ட தொடரை, 2-1 என்ற கணக்கில் ஆஸி., கைப்பற்றியது. எனவே, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, தொடரை கைப்பற்றும் முனைப்பில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. உங்களது பிளேயிங் 11-ஐ கமெண்ட் பண்ணுங்க.
News October 29, 2025
இந்திரனின் புகழை திருட பாஜக முயற்சிக்கிறது: ஆம் ஆத்மி

தீபாவளியை அடுத்து டெல்லியில் காற்று மாசு அதிகமானது. இதனால் 53 ஆண்டுகளுக்கு பிறகு செயற்கை மழை பெய்ய வைப்பதற்காக, மேக விதைப்பு நடைபெற்றது. இதனை ‘மிகப்பெரிய மோசடி’ என ஆம் ஆத்மி விமர்சித்துள்ளது. உண்மையாகவே மழை பெய்தால், அவர்கள் (பாஜக) மழைக் கடவுளான இந்திரனின் புகழை திருடக்கூடும் என்றும் அக்கட்சி கடுமையாக தாக்கியுள்ளது. ஏற்கெனவே சில சமயங்களில் டெல்லியில் செயற்கை மழை பொழிய வைக்கப்பட்டது.
News October 29, 2025
அது அபத்தமானது: சமந்தா

மற்ற நடிகைகளை போலவே நடிக்கவும், தோற்றமளிக்கவும், நடனமாடவும் கடினமாக முயற்சித்ததாக சமந்தா கூறியுள்ளார். ஆனால், அந்த நடிப்பை தற்போது திரும்பி பார்க்கையில் மிகவும் அபத்தமானதாக இருப்பதாக நினைக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக, மயோசிடிஸ் நோயிலிருந்து மீண்டதும், திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரிவிலிருந்து வெளியே வந்ததும் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வுகள் என சமந்தா கூறியிருந்தார்.


