News October 28, 2025

நாமக்கல்: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

நாமக்கல் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

Similar News

News October 28, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (28.10.2025) இரவு ரோந்து பணிக்குக் காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்துப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 28, 2025

நாமக்கல்: வேளாண் பட்டதாரிகளுக்கு மானியம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் அமைப்பதற்கு வேளாண் பட்டதாரிகள் (ம) பட்டயதாரர்களுக்கு ரூ.3 லட்சம் – ரூ.6 லட்சம் வரை மானியம் வழங்கப்படவுள்ளது. எனவே, சுயதொழில் தொடங்க நினைப்போர் முதலில் விரிவான திட்ட அறிக்கையுடன் வங்கியில் கடன் பெற்று, அதன் பிறகு https://www.tnagrisnet.tn.gov.in/ என்ற இணையதளத்தில் மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

News October 28, 2025

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு

image

நாமக்கல் மாவட்டம் நாமக்கலில் இருந்து நாளை (புதன்) 29/10/2025 மற்றும் வரும் நாட்களில் காலை 8:30 மணிக்கு கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ செல்ல 20671 பெங்களூரூ வந்தே பாரத் ரயிலில் டிக்கெட்டுகள் உள்ளன! நாமக்கல் சுற்றுவட்டார பகுதி மக்கள் முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்! இந்த செய்தியினை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.

error: Content is protected !!