News October 28, 2025
கோவை: சிவப்பு மண்டலங்களாக அறிவிப்பு

துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வருகையையொட்டி கோவை நகரில் கொடிசியா, ரெட்பீல்ட்ஸ், நகர்மன்றம், பேருர், வடவள்ளி, மருதமலை பகுதிகள் இன்று முதல் அக்.29-ம் தேதி வரை சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், இப்பகுதிகளில் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Similar News
News October 28, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (28.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 28, 2025
கோவை: India Post-ல் வேலை.. நாளை கடைசி!

கோவை மக்களே, இந்திய அஞ்சலக பேமென்ட் வங்கியில் 348 நிர்வாகி (Executive) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News October 28, 2025
துணை குடியரசுத் தலைவரான பின் முதல்முறையாக!

கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகள் திருப்பூர் (ம) மதுரையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று கோவை விமான நிலையம் வந்தடைந்தார். குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக தமிழகத்திற்கு வந்த அவருக்கு பாஜகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.


