News October 28, 2025
சர்க்கரையை கட்டுப்படுத்த இந்த கசாயம் குடிங்க!

➤இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, சர்க்கரையை கட்டுப்படுத்த வெற்றிலை கசாயம் உதவும் என சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ➤தேவை: வெற்றிலை, இஞ்சி, மிளகு, சீரகம், சுக்கு, ஏலக்காய், பட்டை & நாட்டுச்சர்க்கரை ➤செய்முறை: இவை அனைத்தையும் 10 முதல் 15 நிமிடம் நன்கு கொதிக்க விடவும். கொதி வந்து நல்ல மணம் வந்ததும் அதை வடிகட்டி சிறிது நாட்டுச்சர்க்கரை சேர்த்து குடிக்கலாம். SHARE IT.
Similar News
News October 28, 2025
இன்று இரவு இந்த நேரத்தில் வெளியே வராதீங்க

தீவிரமடைந்துள்ள மொன்தா புயல் இன்றிரவு ஆந்திராவின் பாலகொல்லு அருகே கரையை கடக்கும் என IMD கணித்துள்ளது. இரவு 9 மணிக்கு கரையை கடக்கத் தொடங்கும் என்றும், இரவு 11 மணிக்குள் முழுவதுமாக கரையை கடந்துவிடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. புயல் எதிரொலியாக தமிழகத்திலும் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதனால், இரவில் வெளியே செல்வதை தவிருங்கள்!
News October 28, 2025
ஆடம்பர வெளிநாடு சுற்றுலா செல்ல ஆசையா?

சில நாடுகளில் இந்திய ரூபாய்க்கு நல்ல மதிப்பு இருக்கிறது. அங்கே, நீங்கள் டாலர் வைத்திருப்பது போல ஜாலியாக செலவழிக்கலாம். அதனால், அந்த நாடுகளுக்கு சுற்றுலா செல்லும்போது பட்ஜெட் பற்றி பெரிதாக கவலைப்பட வேண்டாம். அவை எந்தெந்த நாடுகள் என்று மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இவற்றில், நீங்கள் சுற்றுலா செல்ல விரும்பும் நாடு எது? கமெண்ட்ல சொல்லுங்க!
News October 28, 2025
PAK-ல் இருந்து ஆப்கனுக்கு எதிராக போர் புரிகிறதா USA?

தங்கள் மண்ணில் இருந்து 3-ம் நாடு ஒன்று, ஆப்கனுக்கு எதிராக டிரோன் தாக்குதல் நடத்துவதை பாக்., ஒப்புக்கொண்டுள்ளது. அந்த நாட்டின் பெயரை கூறாமல், தங்களுடன் ரகசிய ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. ஆப்கனில் உள்ள பாக்ராம் விமானப்படை தளத்தை கைப்பற்ற முயற்சிப்போம் என டிரம்ப் கூறியது மற்றும் பாக்., -USA இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு மேம்பட்டு வரும் நிலையில், இந்த ரகசியத்தை உடைத்துள்ளது.


