News October 28, 2025

BREAKING: தீவிர புயலாக மாறியது.. கனமழை அலர்ட்

image

மொன்தா புயல் தீவிர புயலாக மாறியுள்ளதாக IMD தெரிவித்துள்ளது. சென்னையிலிருந்து 420 கிமீ தூரத்தில் உள்ள இந்த புயல் வடக்கு நோக்கி மணிக்கு 17 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. ஆந்திராவின் காக்கிநாடா அருகே இன்று மாலை கரையை கடக்கும்போது மணிக்கு 90 – 100 கிமீ வேகத்தில் காற்று வீசும் எனவும் TN-ல் சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் IMD கூறியுள்ளது.

Similar News

News October 28, 2025

PAK-ல் இருந்து ஆப்கனுக்கு எதிராக போர் புரிகிறதா USA?

image

தங்கள் மண்ணில் இருந்து 3-ம் நாடு ஒன்று, ஆப்கனுக்கு எதிராக டிரோன் தாக்குதல் நடத்துவதை பாக்., ஒப்புக்கொண்டுள்ளது. அந்த நாட்டின் பெயரை கூறாமல், தங்களுடன் ரகசிய ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. ஆப்கனில் உள்ள பாக்ராம் விமானப்படை தளத்தை கைப்பற்ற முயற்சிப்போம் என டிரம்ப் கூறியது மற்றும் பாக்., -USA இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு மேம்பட்டு வரும் நிலையில், இந்த ரகசியத்தை உடைத்துள்ளது.

News October 28, 2025

புயல் அலர்ட்.. நாளை பள்ளிகளுக்கு இங்கு விடுமுறை

image

மொன்தா புயலையொட்டி புதுச்சேரி ஏனாமில் நாளை(அக்.29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் மழை பாதிப்பால் சென்னை, திருவள்ளூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போதும் மழை நீடிப்பதால் நாளை விடுமுறை அளிக்க மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகங்கள் விரைவில் அறிவிக்க உள்ளன.

News October 28, 2025

புது Dress வாங்குன உடனேயே இந்த தவறை பண்ணாதீங்க!

image

புதிய ஆடைகளை வாங்கிய உடன் அணிந்தால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். நீங்கள் வாங்கிய ஆடையை வேறொருவர் ட்ரையல் பார்த்திருக்கலாம். அவர்களின் வியர்வை ஆடையில் பட்டிருக்கும். இதை அப்படியே நாம் ஒருநாள் முழுவதும் அணிந்திருந்தால் Rashes, allergy போன்ற சருமப் பிரச்னைகள் வரலாம். இதனால் புதிய ஆடைகளை துவைத்து, வெயிலில் காயப்போட்ட பின்பு அணிவது நல்லது. விழிப்புணர்வுக்காக SHARE.

error: Content is protected !!