News October 28, 2025
அமித்ஷாவை அனகோண்டா என விமர்சித்த உத்தவ் தாக்கரே

அரசியல் சூழ்ச்சி மற்றும் நில அபகரிப்பு மூலம் மும்பையை முழுவதும் விழுங்க பாஜக முயற்சி செய்வதாக உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார். மும்பையில் நிலத்தை அபகரித்து பாஜக அலுவலகம் கட்டப்பட்டதாக வெளியான பத்திரிகை செய்தியை சுட்டிக்காட்டிய அவர், அனகோண்டாவை போல அனைத்தையும் அமித்ஷா விழுங்குவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் ஆப்கானியப் படையெடுப்பாளர் அஹமது ஷா அப்தாலியுடன் BJP தலைவர்களை ஒப்பிட்டும் சாடியுள்ளார்.
Similar News
News October 28, 2025
PAK-ல் இருந்து ஆப்கனுக்கு எதிராக போர் புரிகிறதா USA?

தங்கள் மண்ணில் இருந்து 3-ம் நாடு ஒன்று, ஆப்கனுக்கு எதிராக டிரோன் தாக்குதல் நடத்துவதை பாக்., ஒப்புக்கொண்டுள்ளது. அந்த நாட்டின் பெயரை கூறாமல், தங்களுடன் ரகசிய ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. ஆப்கனில் உள்ள பாக்ராம் விமானப்படை தளத்தை கைப்பற்ற முயற்சிப்போம் என டிரம்ப் கூறியது மற்றும் பாக்., -USA இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு மேம்பட்டு வரும் நிலையில், இந்த ரகசியத்தை உடைத்துள்ளது.
News October 28, 2025
புயல் அலர்ட்.. நாளை பள்ளிகளுக்கு இங்கு விடுமுறை

மொன்தா புயலையொட்டி புதுச்சேரி ஏனாமில் நாளை(அக்.29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் மழை பாதிப்பால் சென்னை, திருவள்ளூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போதும் மழை நீடிப்பதால் நாளை விடுமுறை அளிக்க மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகங்கள் விரைவில் அறிவிக்க உள்ளன.
News October 28, 2025
புது Dress வாங்குன உடனேயே இந்த தவறை பண்ணாதீங்க!

புதிய ஆடைகளை வாங்கிய உடன் அணிந்தால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். நீங்கள் வாங்கிய ஆடையை வேறொருவர் ட்ரையல் பார்த்திருக்கலாம். அவர்களின் வியர்வை ஆடையில் பட்டிருக்கும். இதை அப்படியே நாம் ஒருநாள் முழுவதும் அணிந்திருந்தால் Rashes, allergy போன்ற சருமப் பிரச்னைகள் வரலாம். இதனால் புதிய ஆடைகளை துவைத்து, வெயிலில் காயப்போட்ட பின்பு அணிவது நல்லது. விழிப்புணர்வுக்காக SHARE.


