News October 28, 2025

கடலூர்: ஓடும் ரயிலில் நகை திருட்டு

image

சென்னையில் இருந்து திருச்சி செல்லும் ரயிலில் பயணித்த சரத்குமார் என்ற பயணியின் 2 பவுன் நகையை காணவில்லை என்றும், உடன் வந்த பயணி ஒருவர் திருடி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விருத்தாசலம் ரயில்வே காவல் நிலையத்தில் அந்த நபரை பிடித்து சென்று புகார் அளித்தார். பின்னர் விசாரணையில் அந்த நபர் நகையை திருடியை ஒப்புக் கொண்ட நிலையில், அவரை கைது செய்தனர். பின்னர் மீட்ட நகையை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

Similar News

News October 28, 2025

கடலூர்: விவசாயிகளுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் கவுரவ நிதிஉதவி பெறும் விவசாயிகளில் இதுவரை 62,095 விவசாயிகள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள 17,374 பேர் தனித்துவ அடையாள அட்டை பெறாமல் உள்ளனர். நவம்பர் 2025ம் மாத தொடக்கத்தில், 21-வது தவணை பெறுவதற்கு, விவசாயிகள் விரைவாக தனித்துவ விவசாய அடையாள அட்டைப் பெற இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 28, 2025

கடல் மூழ்கி பெண் மாயம்; போலீசார் விசாரணை

image

கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் பெண் ஒருவர் தனது காலனி மற்றும் கைப்பையை கரையில் வைத்துவிட்டு, திடீரென்று கடலில் இறங்கினார். சிறிது நேரத்தில் அலையில் சிக்கிய அந்தப் பெண் மீண்டும் கரைக்கு வரவில்லை. அதனைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து தேவனாம்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 28, 2025

கடலூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் வருகிற நவ.1ஆம் தேதி உள்ளாட்சித் தினத்தை முன்னிட்டு, காலை 11 மணியளவில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியஎ சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். ஊராட்சியின் நிதி செலவீனம், தணிக்கை அறிக்கை உள்ளிட்டவற்றை விவாதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதில், ஊராட்சி உள்ள அனைத்து பொதுமக்களும் இதில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!