News October 28, 2025
முதல் முறை ODI கேப்டன்களின் சாதனையும் சறுக்கலும்

சுப்மன் கில், ஆஸி.,க்கு எதிரான தொடரில் தோல்வியுற்றார். கில் 43 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஜிம்பாப்வேக்கு (2013) எதிரான ODI தொடரை 5-0 என கோலி தலைமையிலான இந்திய அணி வென்றது. இதில் 197 ரன்களையும் கோலி குவித்தார். இலங்கைக்கு (2017) எதிரான ODI தொடரை 2-1 என வெற்றி பெற்ற ரோஹித்தின் நீலப்படை வென்றது. ரோஹித் மட்டும் 217 ரன்களை குவித்தார். ஆஸி.,க்கு (2007) எதிரான தொடரில் தோல்வியுற்றது தோனியின் கேப்டன்சி.
Similar News
News October 29, 2025
BREAKING: கரையை கடந்தது மொன்தா புயல்

வங்கக்கடலில் உருவான மொன்தா புயல் ஆந்திராவின் மசூலிப்பட்டிணம் – கலிங்கப்பட்டிணம் இடையே நள்ளிரவு 12:30 மணியளவில் கரையை கடந்ததாக IMD தெரிவித்துள்ளது. இந்த புயல் அடுத்த 1-2 மணி நேரத்தில் முழுமையாக கரையைக் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 6 மணி நேரத்தில் வலுவிழக்கும். இதனிடையே, ஆந்திராவின் கடலோர பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
News October 29, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 29, ஐப்பசி 12 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: அஷ்டமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: வளர்பிறை
News October 29, 2025
INDIA கூட்டணியின் பேராசை: நிதிஷ்குமார்

பிஹாரை 15 ஆண்டுகள் கொள்ளையடித்தவர்கள் தற்போது இளைஞர்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதாக INDIA கூட்டணியின் <<18131543>>தேர்தல் வாக்குறுதிகளை<<>> நிதிஷ்குமார் விமர்சித்துள்ளார். அதிகாரத்தின் மீது பேராசை இருப்பதால் தான், இதுபோன்ற ஏமாற்றும் அறிவிப்புகளை வெளியிடுவதாகவும் அவர் சாடியுள்ளார். முன்னதாக, மகளிருக்கு மாதம் ₹2,500, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உள்ளிட்ட பல வாக்குறுதிகளை INDIA கூட்டணி அளித்திருந்தது.


