News October 28, 2025
ஜனநாயகன்: ஒரே வார்த்தையில் முடித்த பிரியாமணி

விஜய்யின் கடைசி படமாக ரிலீஸாகவுள்ள ‘ஜனநாயகன்’ படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. H வினோத் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், நரைன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, மமிதா பைஜு, கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜனநாயகனில் விஜய் உடனான காட்சிகள் பற்றி பிரியாமணியிடம் கேட்டதற்கு, ‘படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்’ என பதிலளித்துள்ளார். ஜனநாயகன் மாபெரும் வெற்றியாக அமையுமா?
Similar News
News October 28, 2025
சுவை மிகுந்த மாலைநேர ஸ்நாக்ஸ்

சுவை மிகுந்த ஸ்நாக்ஸ் சாப்பிடுவது, எப்போதும் தனி அனுபவம் தரும். சுவை மற்றும் மெல்லும்போது ஏற்படும் சத்தங்கள் நம்மை மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும். ஓய்வு நேரங்களில், ஸ்நாக்ஸ் நம் மனதை மகிழ்ச்சியால் நிரப்புகிறது. சுவை மிகுந்த ஸ்நாக்ஸ் பட்டியலை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் உங்களுக்கு பிடித்த ஸ்நாக்ஸ் எது? கமெண்ட்ல சொல்லுங்க.
News October 28, 2025
’Bad Girl’ ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்!

வர்ஷா பரத் இயக்கிய ‘பேட் கேர்ள்’ படம், U/A 16+ சான்றிதழுடன் செப். 5-ம் தேதி வெளியானது. இதன் டீசர் வெளியானதில் இருந்தே இப்படத்தை சுற்றி பல சர்ச்சைகள் வெடித்தது. இது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் பல விருதுகளை வென்றது. இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, நவ.4-ம் தேதி Hotstar ஓடிடி தளத்தில் நீங்கள் இப்படத்தை பார்க்கலாம்.
News October 28, 2025
தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளாவிலும் எதிர்ப்பு

2-ம் கட்டமாக SIR நடத்த போவதாக ECI நேற்று அறிவித்தது. இது ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்டுள்ள நேரடி சவால் என கேரள CM பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். தேசிய குடிமக்கள் பதிவேட்டை(NRC) மறைமுகமாக திணிக்கும் முயற்சி எனவும், மத்தியில் ஆளும் கட்சியின் கைப்பாவையாக ECI செயல்பட கூடாது என்றும் அவர் விமர்சித்துள்ளார். முன்னதாக, ECI-ன் அறிவிப்பை திமுக கூட்டணி கட்சிகளும் சாடியிருந்தது.


