News October 28, 2025
Suriya 46 படத்தில் இணைந்த ரவீனா

வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா, தனது 46-வது படத்தில் நடித்து வருகிறார். ‘Ala Vaikuntapuramlo’ என்ற அல்லு அர்ஜுனின் படம் போன்று ஃபேமிலி டிராமாவாக இருக்கும் என்றும், இது பான் இந்தியா படம் அல்ல என்றும் இப்பட தயாரிப்பாளர் நாக வம்சி கூறியுள்ளார். மேலும் இப்படத்தில் ரவீனா டன்டன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜி.வி இசையில் உருவாகும் இப்படத்தில் மமிதா பைஜு ஹீரோயினாக நடிக்கிறார்.
Similar News
News October 28, 2025
கரப்பான் பூச்சிக்கு சாகும் வரை தூக்கு!

குழப்பமாக இருந்தாலும், இது உண்மை செய்திதான். டெல்லியில் இருந்து துபாய் சென்ற Air India விமானத்தில் இருந்த கரப்பான் பூச்சிக்குதான் இந்த தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. விமானம் தரையிரங்கிய பின் விமானத்தின் ஒவ்வொரு ஊழியரும் தங்களின் வேலை குறித்து Logbook-ல் பதிவிட வேண்டும். அப்படி கடந்த அக்டோபர் 25-ம் தேதி, Logbook-ல் ஊழியர் ஒருவர் எழுதிய இந்த குறிப்பு நெட்டிசன்களை அதிரவைத்துள்ளது. நீங்க என்ன சொல்றீங்க?
News October 28, 2025
கர்னூல் விபத்து.. ஷாக்கிங் தகவல்!

கர்னூல் பஸ் விபத்து குறித்த ஷாக்கிங் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. விபத்துக்கு காரணமான பைக்கை ஓட்டிவந்த சிவசங்கர் 2:45 மணியளவில் டிவைடரில் மோதி மரணமடைகிறார். பைக்கின் மீது பஸ் மோதியது 2:55 மணிக்கு. இடைப்பட்ட 10 நிமிடங்களில், சாலையில் கிடந்த பைக்கை 19 பேர் கடந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர், பைக்கை ஓரம் கட்டியிருந்தால், இந்த விபத்தே தவிர்க்கப்பட்டிருக்குமே என்ற கேள்வி எழாமல் இல்லை.
News October 28, 2025
மாதம் ₹8,000 உதவித்தொகை: தமிழக அரசின் திட்டம்

58 வயதை தாண்டிய தமிழறிஞர்களுக்கு ‘அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை திட்டம்’ மூலம் TN அரசு மாதந்தோறும் ₹8,000 உதவித்தொகை வழங்குகிறது. மேலும், அரசு பஸ்களில் கட்டணமில்லா பயண சலுகையும் வழங்கப்படுகிறது. உதவித்தொகை பெறுபவர்கள் இறந்தால், நாமினிக்கு மாதந்தோறும் ₹3,000 கிடைக்கும். இதற்கு ஆண்டு வருமானம் ₹1.20 லட்சத்துக்கு மிகாமல் இருக்கணும். விண்ணப்பிக்க <


