News October 28, 2025

டேங்கர் விமானங்களை வாங்குகிறதா IAF?

image

நடுவானிலேயே எரிபொருள் நிரப்பும் விமானங்களை வாங்குவதற்கு IAF தயாராகி வருகிறது. இஸ்ரேல் அரசுக்கு சொந்தமான Israel Aircraft Industries நிறுவனத்திடமிருந்து ₹8,000 கோடிக்கு IAF ஒப்பந்தம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் 6 டேங்கர் விமானங்களை வாங்க முடியும். இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், 6 பழைய, இரண்டாம் நிலை போயிங் 767 விமானங்கள் டேங்கர் விமானங்களாக மாற்றியமைக்கப்படும்.

Similar News

News October 28, 2025

கர்னூல் விபத்து.. ஷாக்கிங் தகவல்!

image

கர்னூல் பஸ் விபத்து குறித்த ஷாக்கிங் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. விபத்துக்கு காரணமான பைக்கை ஓட்டிவந்த சிவசங்கர் 2:45 மணியளவில் டிவைடரில் மோதி மரணமடைகிறார். பைக்கின் மீது பஸ் மோதியது 2:55 மணிக்கு. இடைப்பட்ட 10 நிமிடங்களில், சாலையில் கிடந்த பைக்கை 19 பேர் கடந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர், பைக்கை ஓரம் கட்டியிருந்தால், இந்த விபத்தே தவிர்க்கப்பட்டிருக்குமே என்ற கேள்வி எழாமல் இல்லை.

News October 28, 2025

மாதம் ₹8,000 உதவித்தொகை: தமிழக அரசின் திட்டம்

image

58 வயதை தாண்டிய தமிழறிஞர்களுக்கு ‘அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை திட்டம்’ மூலம் TN அரசு மாதந்தோறும் ₹8,000 உதவித்தொகை வழங்குகிறது. மேலும், அரசு பஸ்களில் கட்டணமில்லா பயண சலுகையும் வழங்கப்படுகிறது. உதவித்தொகை பெறுபவர்கள் இறந்தால், நாமினிக்கு மாதந்தோறும் ₹3,000 கிடைக்கும். இதற்கு ஆண்டு வருமானம் ₹1.20 லட்சத்துக்கு மிகாமல் இருக்கணும். விண்ணப்பிக்க <>க்ளிக்<<>> பண்ணுங்க. SHARE IT.

News October 28, 2025

Influencer-களுக்கு செக்.. வந்தாச்சு புது சட்டம்!

image

ஒரு காலத்தில் எங்கு பார்த்தாலும் என்ஜினியர்கள் தான் இருப்பார்கள், அது இப்போது Influencer-களாக மாறியுள்ளது. அதில் தவறில்லை என்றாலும், ஒரு பொருளின் சாதக பாதகங்களை அறியாமலே பலரும் புரமோட் செய்கிறார்கள். இதனால் பல பிரச்னைகள் உருவாகின்றன. இதை தடுக்க, ஒரு பொருளை விளம்பரம் செய்பவர்கள், அதற்கான துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை சீனா விதித்துள்ளது. இதை நம்மூரில் கொண்டுவரலாம் அல்லவா?

error: Content is protected !!