News October 28, 2025
தூத்துக்குடி: தேசிய மீன்வள கணக்கெடுப்பு பணி

கடந்த 2016-ம் ஆண்டு தேசிய மீன்வள கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. அதன் பின் 9 ஆண்டுகளுக்குப் பின்பு மீன்வள கணக்கெடுப்பு பணி நவ.3 அன்று துவங்க உள்ளதாகவும், தூத்துக்குடி மாவட்டத்திலும் கணக்கெடுப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மீனவர்கள் நலத்திட்டங்கள் மற்றும் மீன்வள வளர்ச்சி கணக்கெடுக்கப்படும் என தூத்துக்குடி மத்திய கடல் வளம் மற்றும் மீன் வள ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
Similar News
News October 28, 2025
தூத்துக்குடி: இனி GAS சிலிண்டர் புக் செய்வது ரொம்ப ஈஸி!

தூத்துக்குடி மக்களே, கேஸ் சிலிண்டரை புக் செய்ய போனில் இருந்து SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் REFILL என டைப் செய்து 7718955555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், HP சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு அனுப்பி கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இனி கேஸ் ஏஜென்சிக்கு நேரில் செல்ல தேவையில்லை. SHARE பண்ணுங்க
News October 28, 2025
ரயில் பயணிகளுக்கு ஓர் நற்ச்செய்தி

குருவாயூர் சென்னை விரைவு ரயில் தென் தமிழகத்திலிருந்து செல்லும் பகல் நேர ரயிலாக உள்ளது. இந்த ரயில் கடம்பூர் வாஞ்சிமணியாச்சியில் நின்று செல்ல வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை அடுத்து வரும் 30ம் தேதியிலிருந்து குருவாயூர் விரைவு ரயில் கடம்பூர் மற்றும் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
News October 28, 2025
தூத்துக்குடி: 12th முடித்தால் HEALTH INSPECTOR வேலை APPLY NOW

தூத்துக்குடி மக்களே, தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) காலியாக உள்ள 1429 Health Inspector Grade-II பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12வது தேர்ச்சி பெற்ற 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் நவ.16க்குள் இங்கு <


