News October 28, 2025
நெல் மூட்டைகளை திமுக அரசு பாதுகாக்கவில்லை: அன்புமணி

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பதில் திமுக அரசு அலட்சியம் காட்டுவதாக அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். அரிசி அரவை ஆலைகளுக்கு அனுப்புவதற்காக, கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட 36,000 நெல் மூட்டைகள் இன்னும் அனுப்பி வைக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, கடந்த 10 நாள்களாக பெய்த மழையில் நனைந்த நெல் மூட்டைகள் முளைக்க தொடங்கிவிட்டதாகவும் அன்புமணி பேசியுள்ளார்.
Similar News
News October 28, 2025
BREAKING: தங்கம் விலை மீண்டும் குறைந்தது

தங்கம் விலை இன்று(அக்.28) சவரனுக்கு ₹1,200 குறைந்துள்ளது. 22 கேரட் 1 கிராம் ₹11,300-க்கும், சவரன் ₹90,400-க்கும் விற்பனையாகிறது. <<18124580>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் விலை மளமளவென சரிந்து வரும் நிலையில், நம்மூரிலும் அதன் தாக்கம் எதிரொலித்துள்ளது. இது வரும் சில நாள்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News October 28, 2025
காஷ்மீர் மக்களுக்கு நாங்க இருக்கோம்: பாக்., PM

இந்திய ராணுவம் 1947-ல் காஷ்மீரை ஆக்கிரமித்ததாக கூறி, ஆண்டுதோறும் அக்.27-ஐ கருப்பு நாளாக பாக்., கடைப்பிடித்து வருகிறது. இதனையொட்டி PAK PM ஷெபாஸ் ஷெரீப் & PAK அதிபர் ஆசிப் அலி சர்தாரி, காஷ்மீர் மக்களையும், அவர்களின் உரிமையையும் இந்தியா நிராகரிப்பதாக கூறியுள்ளனர். மேலும், இப்போராட்டத்தில் காஷ்மீர் மக்கள் தனியாக இல்லை எனவும், அவர்களுடன் 24 கோடி பாகிஸ்தானியர்கள் நிற்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளனர்.
News October 28, 2025
Rohit அதிரடியாக விளையாட விரும்பவில்லை: முகமது கைஃப்

ஆஸி.,க்கு எதிரான முதல் ODI போட்டியில் சொதப்பிய ரோஹித், 2-வது (73 ரன்கள்), கடைசி (121 ரன்கள்) போட்டிகளில் ரன்களை குவித்தார். தனது ரன்களை வைத்தே ரசிகர்கள் தன்னை மதிப்பிடுவார்கள் என்பதை ரோஹித் புரிந்து வைத்துள்ளதாக முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். 20 பந்துகளில் 40 ரன்கள் என்ற அதிரடி விளையாட்டை ரோஹித் விளையாட விரும்பவில்லை என்ற அவர், களத்தில் நீண்ட நேரம் இருக்க விரும்புவதாகவும் கூறினார்.


