News October 27, 2025

BREAKING: நவ.2-ல் அனைத்துக் கட்சி கூட்டம்

image

TN-ல்<<18119925>> SIR பணிகளை<<>> மேற்கொள்ள திமுக கூட்டணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் அறிவித்த உடனேயே கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் CM ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதில், அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நவ.2-ல் தி.நகரில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SIR தொடர்பாக தேர்தல் ஆணையமும் அக்.29-ல் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளது.

Similar News

News October 28, 2025

Global Roundup: ஹமாஸ் மெம்பருக்கு இஸ்ரேல் அனுமதி

image

*உகாண்டாவில் இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய அந்நாட்டு அதிபர் முசேவேனி.
*ஆஸி., நியூசி., PM-களுடன் ஜெய்சங்கர் சந்திப்பு.
*வடகிழக்கு இந்திய பகுதிகள், பங்களாதேஷின் மேப்பில் இருந்ததற்கு அந்நாட்டு அரசு மறுப்பு.
*UK மன்னர் சார்லஸை திட்டியவரால் பரபரப்பு.
*இறந்த பணயக்கைதிகளை தேடும் பணிக்காக, ஹமாஸ் உறுப்பினருக்கு இஸ்ரேல் அனுமதி.

News October 28, 2025

RO-KO-வை விமர்சித்தவர்கள் கரப்பான்பூச்சிகள்: ஏபிடி

image

கடந்த சில மாதங்களாக ரோஹித்தும், கோலியும் கடுமையான விமர்சனங்களை சந்தித்ததாக ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ஒருவர் சரியாக விளையாடாத போது, பொந்துகளில் இருந்து வெளிவரும் கரப்பான்பூச்சிகள் போல் விமர்சகர்கள் எதிர்மறை எண்ணங்களை விதைப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும், நாட்டிற்காக தங்களது ஒட்டுமொத்த ஆற்றலையும் கொடுத்தவர்கள் மீது ஏன் இந்த வன்மம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

News October 28, 2025

5 ஆண்டுக்கும் நானே CM: சித்தராமையா

image

கர்நாடகாவில் காங்., ஆட்சி அமைத்தபோது, CM பதவியை சித்தராமையா, DK சிவக்குமார் ஆகியோர் 2.5 ஆண்டுகள் பங்கிட ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், பதவியை விட்டுத்தர விரும்பாத சித்தராமையா, அதற்காக அமைச்சரவையில் மாற்றம் செய்ய திட்டமிட்டதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், காங்., மேலிட முடிவுகளுக்கு உட்பட்டு, 5 ஆண்டுகளுக்கும் தானே CM ஆக நீடிப்பேன் என்று சித்தராமையா கூறியுள்ளார்.

error: Content is protected !!