News October 27, 2025
3 மாதம் இலவசம்.. ஜியோ ரீசார்ஜ் ஆஃபர்

ஹாட் ஸ்டார், அமேசான் பிரைமை இலவசமாக வழங்கும் ரீசார்ஜ் திட்டத்தை ஜியோ அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, ₹1029-க்கு ரீசார்ஜ் செய்தால், 84 நாள்களுக்கு அன்லிமிட்டெட் 5G டேட்டா, அன்லிமிட்டெட் கால், தினமும் 100 SMS, தினமும் அதிவேக 2GB டேட்டா உள்ளிட்டவற்றை பெறலாம். மேலும், 84 நாள்களுக்கு அமேசான் பிரைம் லைட், 3 மாதங்களுக்கு ஹாட் ஸ்டாரை ஃபிரியாக பயன்படுத்தலாம். திரைப்பட பிரியர்களுக்கு இது சிறந்த திட்டம்.
Similar News
News October 28, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 502 ▶குறள்: குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் நாணுடையான் சுட்டே தெளிவு.▶பொருள்: நல்ல குடும்பத்தில் பிறந்து குற்றம் ஏதும் இல்லாதவனாய்ப் பழிக்கு அஞ்சி, வெட்கப்படுபவனையே பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும்.
News October 28, 2025
Global Roundup: ஹமாஸ் மெம்பருக்கு இஸ்ரேல் அனுமதி

*உகாண்டாவில் இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய அந்நாட்டு அதிபர் முசேவேனி.
*ஆஸி., நியூசி., PM-களுடன் ஜெய்சங்கர் சந்திப்பு.
*வடகிழக்கு இந்திய பகுதிகள், பங்களாதேஷின் மேப்பில் இருந்ததற்கு அந்நாட்டு அரசு மறுப்பு.
*UK மன்னர் சார்லஸை திட்டியவரால் பரபரப்பு.
*இறந்த பணயக்கைதிகளை தேடும் பணிக்காக, ஹமாஸ் உறுப்பினருக்கு இஸ்ரேல் அனுமதி.
News October 28, 2025
RO-KO-வை விமர்சித்தவர்கள் கரப்பான்பூச்சிகள்: ஏபிடி

கடந்த சில மாதங்களாக ரோஹித்தும், கோலியும் கடுமையான விமர்சனங்களை சந்தித்ததாக ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ஒருவர் சரியாக விளையாடாத போது, பொந்துகளில் இருந்து வெளிவரும் கரப்பான்பூச்சிகள் போல் விமர்சகர்கள் எதிர்மறை எண்ணங்களை விதைப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும், நாட்டிற்காக தங்களது ஒட்டுமொத்த ஆற்றலையும் கொடுத்தவர்கள் மீது ஏன் இந்த வன்மம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.


