News October 27, 2025

தமிழகத்தில் SIR.. அதிமுக வரவேற்பு

image

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு(SIR) அதிமுக சார்பில் வரவேற்பு தெரிவிப்பதாக ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதனை மாநில அரசின் அலுவலர்கள்தான் மேற்கொள்வர் என்பதால், அவர்கள் நடுநிலையோடு செயல்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். SIR-க்கு திமுக, அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News October 28, 2025

Suriya 46 படத்தில் இணைந்த ரவீனா

image

வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா, தனது 46-வது படத்தில் நடித்து வருகிறார். ‘Ala Vaikuntapuramlo’ என்ற அல்லு அர்ஜுனின் படம் போன்று ஃபேமிலி டிராமாவாக இருக்கும் என்றும், இது பான் இந்தியா படம் அல்ல என்றும் இப்பட தயாரிப்பாளர் நாக வம்சி கூறியுள்ளார். மேலும் இப்படத்தில் ரவீனா டன்டன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜி.வி இசையில் உருவாகும் இப்படத்தில் மமிதா பைஜு ஹீரோயினாக நடிக்கிறார்.

News October 28, 2025

டேங்கர் விமானங்களை வாங்குகிறதா IAF?

image

நடுவானிலேயே எரிபொருள் நிரப்பும் விமானங்களை வாங்குவதற்கு IAF தயாராகி வருகிறது. இஸ்ரேல் அரசுக்கு சொந்தமான Israel Aircraft Industries நிறுவனத்திடமிருந்து ₹8,000 கோடிக்கு IAF ஒப்பந்தம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் 6 டேங்கர் விமானங்களை வாங்க முடியும். இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், 6 பழைய, இரண்டாம் நிலை போயிங் 767 விமானங்கள் டேங்கர் விமானங்களாக மாற்றியமைக்கப்படும்.

News October 28, 2025

இந்திய அணியுடன் இணைந்த ஷஃபாலி வர்மா

image

மகளிர் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில், 21 வயதான அதிரடி வீராங்கனை ஷஃபாலி வர்மா சேர்க்கப்பட்டுள்ளார். வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் தொடக்க வீராங்கனை பிரதிகா ராவலுக்கு படுகாயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் தொடரில் இருந்து விலகிய நிலையில், மாற்று வீராங்கனையாக ஷெபாலி வர்மா அணியுடன் இணைந்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ஷெபாலி வர்மா களமிறங்க அதிக வாய்ப்புள்ளது.

error: Content is protected !!