News October 27, 2025
கோவையில் கந்து வட்டி கொடுமை

கோவையைச் சேர்ந்தவர் ஜான்மைக்கேல்(57). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 2012-ம் ஆண்டு காளப்பட்டியை சேர்ந்த லோகநாதன் என்பவரிடம் ரூ.26.50 லட்சம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இதுவரை 1.50,60,000 பணம் கட்டியும், மேலும் 65 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என கூறி கொலை மிரட்டல் விடுவதாக அவர் மீது ஜான்மைக்கேல் போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News October 28, 2025
கோவை: குடையுடன் வந்து பொதுமக்கள் மனு!

கோவை மாவட்டத்தில் கடந்து சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று கோவை மாவட்டத்தில் நடந்த மக்கள் குறைகள் தீர்க்கும் கூட்டத்திற்கு வந்த பொதுமக்கள் பலரும், மழை காரணமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள், குடையைப் பிடித்தவாறு வந்து மனுக்களை எழுதி ஆட்சியரிடம் வழங்கினர்.
News October 27, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (27.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 27, 2025
கோவை: உங்கள் வீட்டில் பெண் குழந்தை இருக்கா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, 2 (அ) 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம். (தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க)


