News October 27, 2025
சற்றுமுன்: விஜய்க்கு ஆதரவு

கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை மாமல்லபுரம் அழைத்து, விஜய் ஆறுதல் தெரிவித்ததற்கு பல தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், விஜய்க்கு ஆதரவாக நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார். கரூர் சென்றால் விஜய்க்கு பாதுகாப்பு இருக்காது என்பதால் மாமல்லபுரத்திற்கு அழைத்திருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது உயிருக்கு ஆபத்து இருக்குமோ என்ற அச்சத்தில் விஜய் இருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News October 27, 2025
3 மாவட்டங்களில் நாளை பள்ளிகள் விடுமுறை

புயல் பாதிப்பு எதிரொலியாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நாளை(அக்.28) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிப்பதாக அந்தந்த கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்வதால் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. மொன்தா புயல் நாளை தீவிர புயலாக மாறி கரையை கடக்க இருப்பதால், கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
News October 27, 2025
ராசி பலன்கள் (28.10.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News October 27, 2025
SIR நடவடிக்கை: TN அரசியல் கட்சிகளுடன் EC ஆலோசனை

தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் வரும் 29-ம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முன்னிலையில் நடைபெறும் கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு விளக்கப்படவுள்ளது. இதில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், நாதக, விசிக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.


